நண்டலாறு (Nandalar) என்னும் ஆறானது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் இடையே ஓடும் ஆறாகும். இது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு எல்லைக் கோடாகச் செயல்படுகிறது.

பொருள் தொகு

நண்டலாறு => நண்ட (நண்டு) + கல் (பாறை) + பாறையில் நண்டுகளின் புதைபடிமம். இந்த ஆற்றில் உள்ள பாறைகளின் நண்டுகளின் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த ஆற்றிற்கு நண்டலாறு என்று பெயர் வந்தது.

தோற்றம் தொகு

நண்டலாறு காவிரி நதியின் கிளை ஆறாகும். இது கும்பகோணத்திற்கு அருகில் காவேரியிலிருந்து பிரிந்து கும்பகோணம், கோமல், அவாசிக்கரை, நல்லாத்தூர் வழியாக வங்காள விரிகுடாவில் சந்திரபாடிக்கும் தரங்கம்படிக்கும் இடையில் கடலில் கலக்கிறது.[1]

மேலும் காண்க தொகு

தமிழகத்தின் நதிகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. "The district at a glance: Irrigation". Tiruvarur District. The District Collector, Thiruvarur District. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்டலாறு&oldid=3846563" இலிருந்து மீள்விக்கப்பட்டது