நதால், பிரேசில்

நத்தால் (Natal, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [naˈtaw], நத்தாவ்[1] கிறித்துமசு) பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான இரியோ கிராண்டெ டொ நோர்தெயின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். பிரேசிலிய புவியியல் மற்றும் புள்ளிவிவர நிறுவனத்தின் சூலை 2009 அறிக்கையின்படி இங்கு 950, 820 (பெருநகரப் பகுதியில் 1,363,547) மக்கள் வாழ்கின்றனர். பிரேசிலிய பொருளியல் ஆய்வுக் கழகத்தால் இது நாட்டின் மிகவும் பாதுகாப்பான தலைநகர நகரமாகக் கருதப்படுகிறது.[2][3]

நத்தால்
நகராட்சி
நத்தால் நகராட்சி
மேல் இடதிலிருந்து: நியூட்டன் நவர்ரோ பாலம், பிபா கடற்கரை, இரவில் நகரத்தின் காட்சி, ஜெனிபாப்பு மணற்குன்றுகள், ரெயிசு மாகோசு கோட்டை.
மேல் இடதிலிருந்து: நியூட்டன் நவர்ரோ பாலம், பிபா கடற்கரை, இரவில் நகரத்தின் காட்சி, ஜெனிபாப்பு மணற்குன்றுகள், ரெயிசு மாகோசு கோட்டை.
நத்தால்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் நத்தால்
சின்னம்
அடைபெயர்(கள்): "A Noiva do Sol" ("கதிரவனின் மணமகள்"), "Cidade do Sol" ("சூரிய நகரம்") and "Cidade das Dunas" ("மணற்குன்றுகளின் நகரம்")
இரியோ கிராண்டெ டொ நோர்தெ மாநிலத்தில் அமைவிடம்
இரியோ கிராண்டெ டொ நோர்தெ மாநிலத்தில் அமைவிடம்
நாடு பிரேசில்
மண்டலம்வடகிழக்கு மண்டலம்
மாநிலம் இரியோ கிராண்டெ டொ நோர்தெ
நிறுவப்பட்டதுதிசம்பர் 25, 1599
அரசு
 • மேயர்கார்லோசு எட்வர்டொ
பரப்பளவு
 • நகராட்சி170.298 km2 (65.752 sq mi)
ஏற்றம்
30 m (100 ft)
மக்கள்தொகை
 (2008)
 • நகராட்சி9,50,820 (15வது)
 • அடர்த்தி4,734.07/km2 (12,261.2/sq mi)
 • பெருநகர்
13,63,547
நேர வலயம்UTC-3
அசல் குறியீடு
59000-000
இடக் குறியீடு+55 84
இணையதளம்நத்தால், இரியோ கிராண்டெ டொ நோர்ட்டெ

1980களில் கட்டமைக்கப்பட்ட வயா கோசுடீரா என்ற கடலோர நெடுஞ்சாலையும், 10 கிமீ தொலைவுள்ள கடலோர நிழற்சாலைகளும் மணற்குன்றுகளும் இதனை ஓர் சுற்றுலாத்தலமாக்கி உள்ளன. இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்குமாறு பல இடங்கள் உள்ளன; இயற்கை அழகு ததும்பும் மரக்காஜோவின் தூய நீரும், உலகின் பெரும் முந்திரித் தோட்டங்களும், ரியெசு மார்கோசு கோட்டை, ஆல்பெர்ட்டோ மரனோ அரங்கம், நியூட்டன் நவர்ரோ பாலம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களும் நினைவுச்சின்னங்களும் (பொண்டா நெக்ரா, பிப்பா கடற்கரை, ஜெனிபாப்பு போன்ற) அழகான கடற்கரைகளும் புகழ்பெற்ற சுற்றுலாவிடங்களாக அமைந்துள்ளன. இங்கு நடைபெறும் தெருத்திருவிழாவான கார்நத்தால் பரவலாக அறியப்பட்டதாகும். இங்கு பிரேசிலின் இரண்டாவது பெரிய பூங்காவான பார்க்கு தாசு துனாசு உள்ளது.

இந்த நகரம் ஆபிரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் அண்மையில் அமைந்துள்ள தலைநகர நகரமாக உள்ளது.[4] இங்குள்ள அகத்தோ செவெரோ பன்னாட்டு வானூர்தி நிலையம் நத்தாலை பிரேசிலின் பிற நகரங்களுடன் இணைப்பதுடன் பன்னாட்டு சேவைகளையும் இயக்குகிறது. 2014 உலகக்கோப்பை காற்பந்து நடைபெறும் நகரங்களில் ஒன்றாக நத்தால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.[5]

மேற்சான்றுகள்

தொகு
  1. ஐரோபிய போர்த்துக்கேய உச்சரிப்பு IPA: [nɐˈtaɫ] நத்தால் என்பதாகும்
  2. "Population - Natal". Ultimosegundo.ig.com.br. Archived from the original on 2012-08-24. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.
  3. "Época Magazine - About Natal". Revistaepoca.globo.com. 2005-03-31. Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.
  4. "Natal RN". Natalsite.com. Archived from the original on 2012-07-12. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.
  5. "Aeroporto de São Gonçalo: pistas estão garantidas, mas terminal ainda não". Correiodatarde.com.br. 2007-09-25. Archived from the original on 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதால்,_பிரேசில்&oldid=3617610" இலிருந்து மீள்விக்கப்பட்டது