நதீகா பெரேரா

இலங்கை வடிவழகி

நதீகா சமன்மலி பெரேரா (சிங்களம்: නදීකා සමන්මලී පෙරේරා, பிறப்பு: 22 ஒக்டோபர் 1983) இலங்கையைச் சேர்ந்த பிரபலமான வடிவழகி ஆவார். இவர் இலங்கையில் கொழும்பில் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி அணி வகுப்பில் இலங்கை சார்பில் கலந்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு எசுப்பானியாவில் நடைபெற்ற பன்னாட்டு சிறந்த மாடல் அழகி விழாவில் கீரிடம் சூடினார்.[1][2]

நதீகா சமன்மலி பெரேரா
Nadeeka Samanmali Perera
பிறப்புஅக்டோபர் 22, 1983 (1983-10-22) (அகவை 41)
கொழும்பு, இலங்கை
வடிவழகுவியல் தகவல்
உயரம்177 செமீ
முடியின் நிறம்கருப்பு
கண் நிறம்கரும்பழுப்பு

வாழ்க்கை

தொகு

நதீகா தெகிவளை மத்திய கல்லூரியிலும், சென். ஜோசப் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவருக்கு 16 வயதில் இருந்தே மாடல் அழகி ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. நதீகா இலங்கை பெண் மாடல் அழகிகளில் உயரமானவர் இவரது உயரம் 5’10” ஆகும்.[3]

நதீகா வடிவழகு துறை சம்பந்தமான தொழில் முறை கற்கை நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தார், தற்சமயம் அழகு கலை தொடர்பான கற்கை நெறி பயில்கின்றார். அவரது பொழுது போக்குகள் நடனம், கரப்பந்தாட்டம், தையல், ஆடைவடிவமைப்பு, நகைகள் வடிவமைப்பு, தொலைக்காட்சி சுற்றுலா நிகழ்ச்சிகள் பார்த்தல் என்பவை ஆகும். இளம் பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை வைத்து தடைகளை கடந்து அவர்களது கனவுகளை நனவாக்குவதற்கு ஊக்கமளித்தல் இவரது இலட்சியமாகும்.[4]

2007 ஆம் ஆண்டில் நடந்த அணிவகுப்பில் கலந்து  புகைப்பட அழகி, கவர்ச்சி அழகி, சிறந்த தேசிய ஆடை மற்றும் கேட்வாக் அழகி என்ற நான்கு சிறு பட்டங்களை வென்றார். இலங்கை பெண்ணொருவர் நான்கு சிறு பட்டங்களை வென்றது இதுவே முதல் தடவையாகும்.[5] பாரம்பரிய கர யகா என்ற ஆடைக்கே இவர் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றார்.

நதீகா 2012 ஆம் ஆண்டு சொந்தமான வடிவழகு பள்ளியொன்றை 17 மாணவர்களுடன் ஆரம்பித்தார். அம் மாணவர்கள் 21 ஒக்டோபர் 2012 இல் அவர்களது கற்கை நெறிகளை பூர்த்தி செய்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sunday Observer – Nadeeka Perera". Archived from the original on 2012-09-03. பார்க்கப்பட்ட நாள் 2007-08-05.
  2. "A role model for Lanka’s young women". Daily News(Sri Lanka). 23 August 2007 இம் மூலத்தில் இருந்து 8 March 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080308204947/http://www.dailynews.lk/2007/08/23/fea12.asp. 
  3. Nadeeka Perera International Best Female Model 2007
  4. "Miss World 2006 – Nadeeka Perera". Archived from the original on 2007-04-16. பார்க்கப்பட்ட நாள் 2007-09-20.
  5. "UNPLUGGED – International Best Model 2007". Sunday LAKBIMA NEWS(Sri Lanka). 12 August 2007. http://www.lakbimanet.com/lakbimanews/lakbimanews_07_08_12/mag/mag14.htm. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதீகா_பெரேரா&oldid=3843413" இலிருந்து மீள்விக்கப்பட்டது