நத்தாலியா பூக்சா
உக்ரைனிய சதுரங்க வீராங்கனை
நத்தாலியா பூக்சா (Nataliya Buksa, பிறப்பு: நவம்பர் 6, 1996) என்பவர் உக்ரைனிய நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் நத்தாலியா பூக்சா முதலிடம் பிடித்தார்,[1] இவ்வெற்றியின் மூலம் இவருக்கு பெண் கிராண்டு மாசுட்டர் பட்டம் கிடைத்தது. 2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றார்.
நத்தாலியா பூக்சா Nataliya Buksa | |
---|---|
நத்தாலியா பூக்சா (2015) | |
நாடு | உக்ரைன் |
பிறப்பு | நவம்பர் 6, 1996 லிவீவ், உக்ரைன் |
பட்டம் | பெண் கிராண்ட்மாஸ்டர் |
பிடே தரவுகோள் | 2401 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2437 (அக்டோபர் 2018) |
உக்ரைனின் கீவ் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உக்ரைன் சதுரங்க சாம்பியன் பட்டத்தை நடால்லியா பக்சா வென்றார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅசர்பைசான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ராஃப் மாமெதோவை நடால்லியா திருமணம் செய்து கொண்டார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ FIDE World Junior U20 Championship (Girls) 2015
- ↑ Ukraine Women`s Final - 2018
- ↑ ""Только с тобой". Рауф Мамедов спел Наталье Буксе на их свадьбе". chess-news.ru (in ரஷியன்). 2018-11-20. Archived from the original on 2018-12-27. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
வெளி இணைப்புகள்
தொகு- Chessgames.com
- FIDE profile
- Nataliya Buksa profile at Grandcoach.com