முதன்மை பட்டியைத் திறக்கவும்

நத்தோர் மாவட்டம்

வங்காளதேசத்தில் நத்தோர் மாவட்டத்தின் அமைவிடம்
வங்காளதேச பிரதமரின், நாட்டின் வடக்குப் பகுதியின் அலுவலகம் மற்றும் உறைவிடம்
நத்தோர் மாவட்டதி பாயும் சலான் பீல் ஆறு

நத்தோர் மாவட்டம் (Natore district) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தில் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நத்தோர் நகரம் ஆகும். [1]நத்தோர் மாவட்டம், தேசியத் தலைநகரம் டாக்காவிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் நத்தோர் நகரம், ராஜசாகி கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

மாவட்ட எல்லைகள்தொகு

1896.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நத்தோர் மாவட்டத்தின் வடக்கில் நவகோன் மாவட்டம் மற்றும் போக்ரா மாவட்டங்களும், தெற்கில் பப்னா மாவட்டங்களும், கிழக்கில் பப்னா மாவட்டம் மற்றும் சிராஜ்கஞ்ச் மாவட்டங்களும், மேற்கில் ராஜசாகி மாவட்டமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

உட்கட்டமைப்புதொகு

போக்குவரத்துதொகு

இம்மாவட்டத்தில் 236.04 நீளமுடைய தார்ச் சாலைகள் 35 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாதாரணச் சாலைகளும் மற்றும் 1703.85 நீளம் கொண்ட மண் சாலைகளும், 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இருப்புப் பாதைகளும் உள்ளன.

நிதியுதவிதொகு

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொழில், கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளுக்கு, வங்காள தேச கிராமின் வங்கிகள் நிதியுதவி வழங்குகிறது.

மாவட்ட நிர்வாகம்தொகு

 
வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறித்த நினைவுச் சின்னம்

1896.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நத்தோர் மாவட்டத்தினை நிர்வாக வசதிக்காக குருதாஸ்பூர், நத்தோர் சதர், பரய்கிராம், லால்பூர், சிங்கிரா மற்றும் நல்தங்கா என ஆறு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2] மேலும் இம்மாவட்டத்தில் எட்டு நகராட்சி மன்றங்களும், ஐம்பத்தி இரண்டு ஒன்றியக் குழுக்களும், 1351 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 6400 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0771 ஆகும். நான்கு வங்கதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[3]

மக்கள் தொகையியல்தொகு

1896 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 17,06,673 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,54,183 ஆகவும், பெண்கள் 8,52,490 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு பெண்கள் 100 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 898 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 49.6% ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்விதொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

பொருளாதாரம்தொகு

வேளாண் பொருளாதாரத்தை நம்பியுள்ள இம்மாவட்டத்தில் விவசாயிகள் 41.75%, விவசாய கூலித் தொழிலாளர்கள் 28.84%, கூலித் தொழிலாளர்கள் 3.01%, வணிகர்கள் 10%, சேவைதுறை ஊழியர்கள் 5.02%, மீனவர்கள் 1.32% மற்றும் பிற தொழில் செய்வோர் 10.06% ஆக உள்ளனர்.

இம்மாவட்டத்தில் அத்ராய், போரல், நகர், கௌர்நதி போன்ற ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது.

இங்கு நெல், சணல், கரும்பு, பருப்புகள், நிலக்கடலை, காய்கறிகள் முதலியனப் பயிரிடப்படுகிறது.

இங்கு இரண்டு சர்க்கரை ஆலைகளும், எண்ணற்ற அரிசி அரவை ஆலைகளும் உள்ளது.

ஏற்றுமதிதொகு

இம்மாவட்டத்தின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள் அரிசி, சர்க்கரை மற்றும் காய்கறிகள் ஆகும்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தோர்_மாவட்டம்&oldid=2176592" இருந்து மீள்விக்கப்பட்டது