சிராஜ்கஞ்ச் மாவட்டம்

வங்காளதேசத்தின் ராஜசாகி கோட்டத்திலுள்ள மாவட்டம்


சிராஜ்கஞ்ச் மாவட்டம் (Sirajganj District) (வங்காள மொழி: সিরাজগঞ্জ জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் உள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிராஜ்கஞ்ச் நகரம் ஆகும். [1]

வங்காளதேசத்தில் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

தொகு

சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் போக்ரா மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், மேற்கில் பப்னா மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், தெற்கில் பப்னா மாவட்டம் மற்றும் மணிகஞ்ச் மாவட்டமும், கிழக்கில் மணிகஞ்ச் மாவட்டம், ஜமால்பூர் மாவட்டம் மற்றும் தங்காய்ல் மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

2402.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஒன்பது துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உல்லபாரா, சஹத்பூர், சிராஜ்கஞ்ச், பெல்குச்சி, ராய்கஞ்ச் மற்றும் காஜிப்பூர் என ஆறு நகராட்சி மன்றங்களும், 82 உள்ளாட்சி ஒன்றியங்களும், 2016 கிராமங்களும் உள்ளது. மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 6700 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0751 ஆகும்.

பொருளாதாரம்

தொகு

வேளாண்மைப் பொருளாதாரத்தையே அதிகம் நம்பியுள்ளது இம்மாவட்டம். இங்கு ஜமுனா ஆறு, கர்தோ ஆறு, போரல் ஆறு, இஷாமதி ஆறு, புல்ஜோரா ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே நெல், சணல், கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, கடுகு, மிளகாய் முதலிய பயிர்கள் விளைகிறது.

தட்ப வெப்பம்

தொகு

இம்மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பம் 34.6° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பம் 11.9° செல்சியஸ் ஆக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1610 மில்லி மீட்டர் ஆகும்.

மக்கள் தொகையியல்

தொகு

2402.05 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 30,97,489 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 15,51,368 ஆகவும், பெண்கள் 15,46,121 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1290 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 42.1% ஆக உள்ளது.[2]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

தொகு

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. தாய் மொழியான வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kamrul Islam (2012), "Sirajganj District", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
  2. Community Report Sirajganj Zila June 2012[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராஜ்கஞ்ச்_மாவட்டம்&oldid=3244404" இலிருந்து மீள்விக்கப்பட்டது