நந்தா ஏரி

கோவாவில் உள்ள ஈரநிலம்

நந்தா ஏரி (Nanda lake) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள ராம்சர் சதுப்பு நிலமாகும். இந்த ஈரநிலம் 0.42 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1] தெற்கு கோவா மாவட்டத்தில் கர்கோரம் நகரத்தில் இந்த ஈரநிலம் 0.42 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நந்தா ஏரி கோவாவின் முதல் மற்றும் ஒரே ராம்சார் ஈரநில தளமாகும்.[2]

வரலாறு

தொகு

2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகளின் கீழ் 2021 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நந்தா ஏரியை ஈரநிலமாக அறிவித்தது.[2] 2022 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஆறாம் தேதியன்று நடைபெற்ற 2022 ராம்சர் மாநாட்டில் ராம்சர் ஈரநில தளமாகவும் அறிவிக்கப்பட்டது.[1]

விலங்கினங்கள்

தொகு

சிவப்பு-மூக்கு ஆள்காட்டி, வெள்ளை அறிவாள் மூக்கன், தாமிர இறக்கை இலைக்கோழி, செம்பருந்து, சிறு நீல மீன்கொத்தி, கம்பிவால் தகைவிலான், வெண் கொக்கு, சின்ன நீர்க்காகம், சிறிய சீழ்க்கைச்சிரவி போன்ற பறவையினங்களுக்கு நந்தா ஏரி தாயகமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "RAMSAR WETLANDS SITES (As on August, 2022)". ENVIS Centre on Wildlife & Protected Areas. பார்க்கப்பட்ட நாள் 5 September 2022.
  2. 2.0 2.1 2.2 "Nanda lake in Curchorem is Goa’s first Ramsar site". https://m.timesofindia.com/city/goa/nanda-lake-in-curchorem-is-states-first-ramsar-site/amp_articleshow/93332412.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தா_ஏரி&oldid=3931259" இலிருந்து மீள்விக்கப்பட்டது