கம்பிவால் தகைவிலான்

கம்பிவால் தகைவிலான்
Wiretailed swallowed ,Chandigarh, India.JPG
Wire-tailed Swallow Hirundo smithii by Dr. Raju Kasambe.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Hirundinidae
பேரினம்: Hirundo
இனம்: H. smithii
இருசொற் பெயரீடு
Hirundo smithii
Leach, 1818

ஆங்கிலத்தில் Wire-tailed Swallow என்று அழைக்கப்படும் கம்பிவால் தகைவிலான் ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும் .இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.நார்வே நாட்டை சார்ந்த தாவர சூழலியல் அறிஞர் கிறிஸ்டியன் சுமித் என்பவர் பெயரால்smithilஎன்றழைக்கப்படுகிறது.

பெயர்கள்தொகு

தமிழில்  :கம்பிவால் தகைவிலான்

ஆங்கிலப்பெயர்  :Wire-tailed Swallow

அறிவியல் பெயர் : Hirundo smithil [2]

உடலமைப்புதொகு

14 செ.மீ. - செம்பழுப்புத் தொப்பி அணிந்தது போன்ற தலையும் பளப்பளப்பான கருநீல நிற உடலும் கொண்டது. வெள்ளை வெளேர் என்ற மார்பும் வயிறும் வாலிலிருந்து தொங்கும் 10 செ.மீ. நீளமுள்ள இரண்டு கம்பிகளும் இதனை அடையாளம் கண்டு கொள்ள உதவுபவை.

காணப்படும் பகுதிகள் ,உணவுதொகு

தமிழ்நாட்டில் குளிர்காலத்தில் ஓரளவு ஆங்காங்கே காணப்படும் இது நீலகிரியில் மட்டும் இனப்பெருக்கம் செய்வதான குறிப்பு உள்ளது. கோவை. தஞ்சை மாவட்டங்களில் இதன் நிலைப்பற்றி அறிவதற்கான குறிப்புகள் இல்லை. பழக்க வழக்கங்கள் மற்ற தகைவிலானைப் போன்றதே எனினும் நீர்வளம் மிகுந்த பகுதிகளையே நாடித்திரிவது. பெரும்பாலானவை குளிர் காலத்தில் மற்ற தகைவிலான்களைப் போலவே வடக்கே இருந்து வலசை வந்து திரும்பும். [3]

இனப்பெருக்கம்தொகு

சில கம்பி வால் தகைவிலான்கள் நீலகிரியில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

படங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hirundo smithii
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

  1. "Hirundo smithii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "கம்பிவால் தகைவிலான் Wire-tailed_swallow". பார்த்த நாள் 1 நவம்பர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:105
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பிவால்_தகைவிலான்&oldid=2923543" இருந்து மீள்விக்கப்பட்டது