நந்திகோட்கூர்
நந்திகோட்கூர் (Nandikotkur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சியும், மண்டலமும் ஆகும்.
நந்திகோட்கூர் | |
---|---|
அடைபெயர்(கள்): நகரம் | |
ஆள்கூறுகள்: 15°52′00″N 78°16′00″E / 15.8667°N 78.2667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கர்நூல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.14 km2 (8.93 sq mi) |
ஏற்றம் | 292 m (958 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 46,593 |
• அடர்த்தி | 2,000/km2 (5,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | Nandikotkur Municipality |
நிலவியல்
தொகுநந்திகோட்கூர் 15°52′00″N 78°16′00″E / 15.8667°N 78.2667°E இல் அமைந்துள்ளது. [2] இது கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 292 மீட்டர் (961 அடி) உயரத்தில் உள்ளது. கிருஷ்ணா ஆறு அருகிலுள்ளது.
நந்திகோட்கூர் என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்திலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மண்டலமாகும். கர்னூல், குண்டூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக இது செயல்படுகிறது. கர்னூலில் இருந்து ஸ்ரீசைலம் செல்லும் பாதை நந்திகோட்கூர் வழியாகவும் செல்கிறது. நந்திகோட்கூர் ஒன்பது நந்தி சிலைகளால் (காளைகள்) சூழப்பட்டிருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே இந்த இடம் முன்பு நவநந்திகோட்கூர் என்றும் இப்போது நந்திகோட்கூர் என்றும் அழைக்கப்படுகிறது. கர்னூல், அனந்தப்பூர், கடப்பா , சித்தூர் மாவட்டங்களுக்கு பாசன நீர் வழங்கும் ஹந்த்ரி நீவா கால்வாய், நதிகோட்கூர் மண்டலத்தில் இருந்து தொடங்குகிறது. நந்திகோட்கூரில் இருந்து 25 கிமீ தொலைவில் ஏழு நதிகள் சங்கமிக்கும் சங்கமகேசுவரம் அமைந்துள்ளது. நந்திகோட்கூரின் மக்கள் தொகை 46,953 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
போக்குவரத்து
தொகுஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் நந்திகோட்கூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகளை இயக்குகிறது. [3]
கல்வி
தொகுமாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. [4] [5] வெவ்வேறு பள்ளிகள் ஆங்கிலம், தெலுங்கு மொழிகளை பயிற்றுவிக்கிறது..
சான்றுகள்
தொகு- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
- ↑ "Nandikotkur, India Page". Falling Rain Genomics, Inc.
- ↑ "Bus Stations in Districts". Andhra Pradesh State Road Transport Corporation. Archived from the original on 22 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 27 December 2015. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.
- ↑ "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. Archived from the original on 7 November 2016. பார்க்கப்பட்ட நாள் 7 November 2016.