நந்திக்கடல்
நந்திக் கடல் (ஆங்கில மொழி: Nantikkaṭal) என்பது இலங்கையின் வடகிழக்கிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயல் ஆகும். இதன் அர்த்தம் சங்குகளின் கடல் என்பதாகும்.[1]. பேராறு உள்ளடங்கலாக சில ஆறுகள் இக்கடற்காயலில் கலக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இதனால் நந்திக்கடல் முல்லைத்தீவு கடற்காயல் என அழைக்கப்படுவதும் உண்டு.
நந்திக்கடல் | |
---|---|
அமைவிடம் | முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை |
ஆள்கூறுகள் | 9°17′0″N 80°46′0″E / 9.28333°N 80.76667°E |
வகை | கடற்காயல் |
முதன்மை வரத்து | பேராறு |
முதன்மை வெளியேற்றம் | இந்து சமுத்திரம் |
அதிகபட்ச நீளம் | 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) |
அதிகபட்ச அகலம் | 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) |
குடியேற்றங்கள் | முல்லைத்தீவு |
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்விடத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nanthikkadal". TamilNet. 6 March 2009. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.
- ↑ விடுதலைப் புலிகள் தலைவர் "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு