நந்தினி முந்துகூர்

நந்தினி முந்துகூர் (Nandini Mundkur) இந்தியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை மருத்துவர் ஆவார். குழந்தை வளர்ச்சி துறையில் சிகிச்சைக்கான முன்னோடி பணிகளை இவர் செய்து வருகிறார். ஆரம்ப கண்டறிதல் மற்றும் தலையீடு சேவைகள் குழந்தை வளர்ச்சி சார் சீர்கேடுகள் போன்ற செயல்பாடுகளில் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

நந்தினி முந்துகூர்
Nandini Mundkur
பிறப்பு19 சூலை 1949 (1949-07-19) (அகவை 74)
திருவள்ளூர், தமிழ்நாடு, இந்தியா
கல்விமௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி தில்லி
செயற்பாட்டுக்
காலம்
1986-முதல்
அறியப்படுவதுஆரம்பகால குழந்தைப் பருவ தலையீடு
குழந்தை வளர்ச்சி
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்குழந்தை மருத்துவம்
சிறப்புத்துறைவளர்ச்சி கோளாறுகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்மந்தன் ஆசியா, 2008
ரோட்டரி விருது, 1998
அசோகா சக உறுப்பினர் தகுதி, 1986
சத்ய குப்தா விருது, 1978

குழந்தை வளர்ச்சியை குழந்தை மருத்துவத்தின் அடிப்படை அறிவியல் என்று மருத்துவ உலகினர் விவரிக்கிறார்கள். கல்வியும் அறிவுறுத்தலும் இத்துறையின் முதன்மையான இலக்குகளாகும். கல்வி முயற்சிகளில் நேரடி மற்றும் நிகழ்நேர நடவடிக்கைகள் அடங்கும்.

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

1949 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள ஒரு பாரம்பரிய தமிழர் குடும்பத்தில் நந்தினி பிறந்தார். 1972 ஆம் ஆண்டு புதுடில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் 1977 ஆம் ஆண்டு குழந்தை மருத்துவத்தில் முதுநிலை படிப்பையும் முடித்தார். தனது ஆரம்பகால வாழ்க்கையின் போது குழந்தை மருத்துவராக பயிற்சி பெறத் தொடங்கினார். அதே நேரத்தில் குழந்தை வளர்ச்சி ஆய்வுகள் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அக்டோபர் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் வோச்தாவின் ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சை பாடத்தில் ஒரு பயிற்சியை முடித்தார். [1] அமெரிக்க பெருமூளை வாதம் மற்றும் வளர்ச்சி மருத்துவம் அகாதமியின் உறுப்பினராகவும் நந்தினி உள்ளார்.

தற்போது பெங்களூரில் செயநகர் மற்றும் மல்லேசுவரத்தில் நந்தினி பயிற்சி செய்கிறார். [2]

பங்களிப்புகள் தொகு

இந்தியாவில் வளர்ச்சி குழந்தை மருத்துவத் துறையில் விழிப்புணர்வு-கட்டமைப்பு மற்றும் ஆரம்பகால தலையீட்டு கருவிகளை உருவாக்குவதற்கு இவர் தலைமை தாங்கினார். 2006 ஆம் ஆண்டில் குறைபாடுகள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையம் என்ற அமைப்பு ஒன்றை இவர் நிறுவினார். ஆண்டு இந்த மையம் பிறப்பு முதல் இளமைப் பருவம் வரை உடல், மன, மொழி மற்றும் கற்றல் திறன்களின் பரந்த அளவிலான வளர்ச்சிப் பிரச்சினைகளைக் கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீட்டு சேவைகளைப் பயிற்சி செய்யும் பள்ளியையும் இம்மையம் நடத்துகிறது.

டாக்டர் நந்தினி முந்துகூர் சர்வதேச குழந்தைகள் அமைதி மன்றத்தின் இயக்குநராக உள்ளார் [3] மற்றும் இவ்வமைப்பின் வாயிலாக இவரது தற்போதைய பணி நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான சமூக உணர்ச்சி கற்றல் திட்டங்களில் பணியாற்றுவதை உள்ளடக்கியதாகும்.

சாக்கும்விட் அறக்கட்டளையின் இயக்குநராக, [4] நந்தினி இந்தியாவின் கர்நாடக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்காக [5] கற்றலுடன் கணிதம்" என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

மருத்துவரான நந்தினி முந்துகூர், டோட்சுகைடு என்ற இணையாதளத்தை நிறுவி பராமரித்து வருகிறார். டோட்சுகைடு  என்பது பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சியை முழுமையாக கவனித்துக்கொள்வதற்கான ஒரு நிகழ்நேர சுய கல்வி இணையதளமாகும். அதிநவீன கட்டுரைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கையேடுகள் மற்றும் பிற பயனுள்ள பொருட்கள் இதன் இணையதளத்தில் உள்ளன. குழந்தை வளர்ச்சி மற்றும் நடத்தை தலைப்புகளில் புதுப்பித்த கட்டுரைகளை செய்தி மடல் வழங்குகிறது. குறைபாடுகள் உள்ள ஒவ்வொரு குழந்தையும் சிறந்த எதிர்காலத்தை அடைய உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

சமூக குழந்தை மருத்துவத்திற்கான சத்ய குப்தா விருது - 1978 [6]

  • சமூக தொழில்முனைவோருக்கான அசோகா சக உறுப்பினர் விருது - 1986
  • குழந்தைகள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவைக்கான தேச சிநேகி விருது -1996 [7]
  • குழந்தை பராமரிப்புக்கான ரோட்டரி விருது - 1998
  • சர்வதேச மகளிர் தினம் -2002 அன்று பெங்களூரு நகர பெண்கள் வட்டத்தின் மகளிர் சாதனையாளர் விருது
  • 2008 ஆம் ஆண்டில் வார இதழால் வழங்கப்பட்ட இந்திய மேதைகள் பட்டியலில் இடம்
  • செயற்கைக்கோள் வழியாக கர்நாடகாவில் கிராமப்புற குழந்தைகளுக்கு கணிதத்தை கற்பித்ததற்காக மந்தன் விருது [8]

சமீபத்திய திட்டங்கள் தொகு

  • மருத்துவர் நந்தினி முந்துகூர் 2010 ஆம் ஆண்டு இந்தோ -கனடா ஆட்டிசம் நெட்வொர்க்கின் முக்கிய பங்களிப்பாளராக இருந்தார் [9]

மேற்கோள்கள் தொகு

  1. Banaszek, G (2010). "Vojta's method as the early neurodevelopmental diagnosis and therapy concept". Przegl Lek 67 (1): 67–76. பப்மெட்:20509579. 
  2. "Login || Qikwell".
  3. "International Children Peace Council" இம் மூலத்தில் இருந்து 2012-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120324225236/http://www.icpc.org.in/. 
  4. "Sackhumvit Trust". http://www.sackhumvit.org. 
  5. "Sackhumvit Projects". http://www.sackhumvit.org/learnwithfun.html. 
  6. "Sathya Gupta Award". http://www.iapdelhi.com/pediatrics_awards.htm. 
  7. "Desha Snehi Awardee" இம் மூலத்தில் இருந்து 2017-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170420210144/http://www.idfbangalore.org/activities.html. 
  8. "Manthan Award 2008" இம் மூலத்தில் இருந்து 2011-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111004044023/http://manthanaward.org/section_full_story.asp?id=646. 
  9. "Developmental and Behavioral News". American Academy of Pediatrics இம் மூலத்தில் இருந்து 2011-02-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110221163423/http://www.aap.org/sections/dbpeds/pdf/LR_Final%20SODBP%20Newsletter%20Fall%202010.pdf. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_முந்துகூர்&oldid=3370086" இலிருந்து மீள்விக்கப்பட்டது