நன்னபனேனி ராஜகுமாரி

இந்திய அரசியல்வாதி

நன்னபனேனி ராஜகுமாரி(Nannapaneni Rajakumari) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஆந்திர மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவருமான ஆவார். அவர் தெலுங்கு தேசக் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஆவார்.[1][2][3]

நன்னபனேனி ராஜகுமாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 அக்டோபர் 1948 (1948-10-09) (அகவை 75)
As of October 2018

அரசியல் வாழ்க்கை தொகு

என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கியபோது இவர் அரசியலில் நுழைந்தார்.  ராஜகுமாரி ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை சாட்டேனபள்ளி (1983-1985) மற்றும் வினுகொண்டா (1989-1994) தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4].[5] இவர் நடேண்ட்லா பாஸ்கரராவின் அரசாங்கத்தில் கலாச்சார விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

என். ஜனார்த்தனா ரெட்டி மற்றும் டாக்டர் சென்னா ரெட்டி ஆட்சிகளின் போது இந்தியாவில் தலைமை கொறடா ஆன முதல் பெண் இவர். இவர் ஆந்திர மாநில மஹிலா காங்கிரஸின் தலைவராகவும், தெலுங்கு தேசம் கட்சியின் பெண்கள் பிரிவான தெலுங்கு மஹிலாவின் தலைவராகவும் இருந்தார்.

தெலுங்கானாவிலிருந்து சில குழுக்களின் அழுத்தத்தால் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை பிளவுபடுத்துவதற்கு எதிராக, டிசம்பர் 20, 2009 முதல், இவர் இறக்கும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராஜகுமாரி அறிவித்தார். மத்திய அரசு 2009 டிசம்பர் 9 அன்று பிரித்தல் செயல்முறை தொடங்கும் என்று அறிவித்தது, பின்னர் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் குழுக்களுடன் பரந்த ஆலோசனையின் பின்னரே இந்த செயல்முறை தொடங்கும் என டிசம்பர் 23 அன்று தெளிவுபடுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ராஜகுமாரி தன் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.[6]

ராஜகுமாரி பல நாவல்களை எழுதினார். அவற்றுள் 9 நாவல்கள் கொண்ட 'நன்னபனேனி நவரத்னாலு' தொடர் அடங்கும். பாடுவதிலும் எழுதுவதிலும் ராஜகுமாரியின் ஆர்வம் நன்கு அறியப்பட்டதாகும். ஒரு நல்ல ஓவியரும் கூட. ராஜகுமாரி அகில இந்திய வானொலியில் (ஏ.ஐ.ஆர்) 97 பிரதான நேர நிகழ்ச்சிகளில் பொது நலன்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கிறார்.

படங்கள் தொகு

ரத்னாவின் விஜேதா படத்தில் இவர் ஒரு நீதிபதியாக நடித்தார்.[7]

குறிப்புகள் தொகு

  1. "Can Chandrababu Naidu come back to power in Andhra Pradesh on his Rs 70,000 crore crop loan waiver scheme? : South, News - India Today". Indiatoday.intoday.in. 2012-11-23. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.
  2. "Andhra Pradesh / Hyderabad News : Nannapaneni demands action against Nagam". தி இந்து. 2011-03-23. Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.
  3. "Telangana divide all pervasive here : Latest Headlines, News - India Today". Indiatoday.intoday.in. 2009-12-23. பார்க்கப்பட்ட நாள் 2013-07-19.
  4. "Sattenapalli Assembly Constituency Details". Archived from the original on 2 September 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
  5. "Vinukonda Assembly Constituency Details". Archived from the original on 7 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
  6. "Nannapaneni pulls a fast one". The New Indian Express. 2009-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
  7. "Nannapaneni appearing as justice in 'Vijetha'". indiaglitz.com. Archived from the original on 17 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னபனேனி_ராஜகுமாரி&oldid=3741956" இலிருந்து மீள்விக்கப்பட்டது