நன்னீர் சதுப்புநிலம்

நன்னீர் சதுப்பு நிலம் (Freshwater marsh) என்பது சதுப்பு நிலத்தில் நன்னீர் இருப்பதை குறிக்கின்றது. நன்னீர் சதுப்பு நிலங்கள் வழக்கமாக ஆறு கடலில் கலக்கும் இடங்களிலும் தாழ்வான வடிகால் பகுதிகளிலும் காணப்படும்.[1]. இதன் எதிரிணை உப்பு நீர் சதுப்பு நிலம், இவை உயர் கடலோர உயிர்-வாழிடத்தின் அலை ஏற்ற மண்டலத்தில் காணப்படும், இது கடல் நீரால் வழக்கமாக சூழ்ந்திருக்கும்.

நன்னீர் ஆற்றுச் சதுப்பு நிலத் தாவரங்கள்
ஏரிக்கரையின் ஆழமற்ற நீர்ப்பகுதியில் சதுப்பு நிலத்தாவரங்கள்

நன்னீர் சதுப்பு நிலங்கள் என்பவை அலைகளற்ற பல் உயிர்த்தொகுதி இதில் சிறிதோ அல்லது ஒன்றுமே கரி இல்லாமல் இருக்கும். வளைகுடா பகுதியில் இவை பொதுவாக காணப்படும், குறிப்பாக ஃபுளோரிடாவில். இரண்டில் ஒரு கோட்பாடு வகை இருக்கும்: ஒன்று நன்நீரால் கனிமப்படுத்தப்பட்ட சதுப்புநிலம், இவை நீரை நிலத்தடி நீர், நீரோடைகள் மற்றும் மேற்பரப்பு நீரோட்டம் ஆகியவற்றிலிருந்து பெருகின்றன. அல்லது, நன்நீரால் குறைவாக கனிமப்படுத்தப்பட்ட சதுப்புநிலம், இவை ஈரப்பதத்தை நேரிடையாக மழைநீரில் இருந்து பெறுகின்றன. நன்னீர் சதுப்புநிலங்கள் பல்லுயிர்த்தன்மையை ஊக்குவிக்கின்றன. இங்கு பொதுவாக காணப்படும் இனங்கள் வாத்து, நாமக் கோழி, அன்னப்பற்வை, பாடும் பறவைகள், மற்றும் கருப்பு வாத்து. எனினும் ஆழமற்ற சதுபுநிலங்களில் பலவகையான மீன் இருப்பதில்லை, ஆனால் ஆழமானவை பல இனங்களுக்கு வீடாக இருக்கின்றன. பொதுவாக காணப்படும் சில தாவரங்கள் நீர் அல்லி, அலையாத்தி போன்ற தாவரங்கள் ஆகும்[2].

ஃபுளாரிடா எவர்கிலேட் தான் இந்த உலகிலேயெ மிகப்பெரிய தொடர்ச்சியான நன்னீர் சதுப்புநிலம் ஆகும்.[3]. ஃபுளாரிடாவின் தென்முனையில் உள்ள இக்காட்டின் பரப்பு 4,200 சதுரமைல்கள்.

இதனையும் காண்க தொகு

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Freshwater Marshes - NatureWorks". Nhptv.org. பார்க்கப்பட்ட நாள் April 30, 2010.
  2. "Florida Wetlands: Freshwater Marshes". Wetlandextension.ifas.ufl.edu. Archived from the original on ஏப்ரல் 1, 2010. பார்க்கப்பட்ட நாள் April 30, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Laura Riley; William Riley (1 January 2005). Nature's Strongholds: The World's Great Wildlife Reserves. Princeton University. பக். 491. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-12219-9. https://books.google.com/books?id=icMuBQhW4vgC&pg=PA491. பார்த்த நாள்: 8 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னீர்_சதுப்புநிலம்&oldid=3871280" இலிருந்து மீள்விக்கப்பட்டது