நன்னீர் முத்துக்கள்

நன்னீர் முத்துக்கள் (Freshwater pearl), நன்னீிரில் வாழக் கூடிய முத்துச்சிப்பிகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இம்முத்துக்களானது, ஜப்பான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குறைந்த அளவிலும், சீனாவில் அதிகமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. பளபளப்பான நன்னீர் முத்துக்களின் தரமானது சிப்பியைப் பொறுத்து அமைகிறது. மேலும், முத்துக்களின் ஒளிரும் தன்மை, வடிவம், மேற்பரப்பு, வண்ணம், ஆகியவற்றின் அடிப்படையில் 'அ' வரிசைமுறையின் மூலம் மதிப்பு அளிக்கப்பட்டு தரப்படுத்தப்படுகிறது.[1]

முத்துமாலை

தொழில் நுட்பம் தொகு

ஓலார்ட்டிக் நன்னீர் முத்து சிப்பிகள், (Holarctic freshwater pearl musse) முத்து நகை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு ஸ்காட்லாந்து ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தது; இந்த இனங்கள் இப்போது பெரும்பாலான பகுதிகளில் அருகி வருகின்றன.[2] ஜப்பானிய நன்னீர் முத்து உற்பத்தி துறையானது நீடித்திருக்கவில்லை என்றாலும், முத்துக்களைப் பயிரிட்ட முதல் நாடு என்ற சிறப்பினைப் பெற்றது. ஆசியாவுக்கு வெளியே உள்ள ஒரே நன்னீர் முத்துப் பண்ணை என்பதால், டென்னிசியில் உள்ள முத்துப் பண்ணை, சிறப்பு வரலாற்று மதிப்பைக் கொண்டிருக்கிறது. இந்த முத்து பண்ணையை நிறுவியவர் ஜான் லாடெண்டிஸ்ஸிசி, அப்பண்ணையானது சுற்றுலா பயணிகளைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இன்றைய தினம் சீனா தான் நன்னீா முத்து உற்பத்தியில் வணிகரீதியாக 1500 டன் (2005) அளவிற்கு [3] கலப்பின ரகங்களைப் பயன்படுத்தி முத்து உற்பத்தி செய்து வருகிறது.

ஒட்டிடுதல் தொகு

ஒட்டிடுதல் முறையானது தகுந்த சிப்பியை தேர்ந்தெடுத்து, அச் சிப்பியின் மெந்தோல் பகுதியிலிருந்து சிறு துண்டு திசு வெட்டியெடுக்கப்படுகிறது. இத்திசுவானது பின்னர் மூன்று மில்லி மீட்டர் சதுரங்களாக வெட்டப்படுகிறது. இந்த சதுரங்கள் அறுவை சிகிச்சையை நிகழ்த்தும் தொழில்நுட்ப நிபுணருக்கு வழங்கப்படுகின்றன. அவர்கள் இத்திசுவை சிப்பிக்குள் சொருகுகின்றனர். அத்திசுப்பகுதியில் இருந்து அழகான முத்து உருவாகுகின்றது.

செயல்முறை தொகு

நன்னீர் முத்து அறுவடை செய்யப்படும் போது சிப்பியோடவே வாங்கப்படுகின்றன. அறுவடைக்குப் பிறகு, முத்துக்கள் முதல்-நிலை தொழிற்சாலைக்கு வழங்கப்படுகின்றன, இங்கு முத்துக்கள் சுத்தம் செய்து, அளவு மற்றும் வடிவவாாியாக பிாித்தெடுக்கப்படுகிறது. இந்த செயல்முறை முடிந்தபின், முத்துக்கள் ஒரு சூடான மற்றும் குளிர் இரசாயன திரவத்தின் மூலம் வெளுக்கப்படுகிறது. அதன் பின்பு சாயமேற்றப்படாத நல்முத்து பெறப்படுகிறது. இம்முத்து வடிவத்தை சாி செய்த பின்பு மக்காசோள மாவு மற்றும் மெழுகு கொண்டு மெருகேற்றப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Cultured Freshwater Pearl பரணிடப்பட்டது 2017-06-29 at the வந்தவழி இயந்திரம். Pearl Grading Pearl-Guide.com. Retrieved May 6, 2014.
  2. Cherry, John, Medieval Goldsmiths, p. 36, The British Museum Press, 2011 (2nd edn.), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780714128238
  3. [1] பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் Aquaculture in China - Freshwater Pearl Culture
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னீர்_முத்துக்கள்&oldid=3588539" இலிருந்து மீள்விக்கப்பட்டது