நமது மொழிபெயர்ப்பு உலகம்: உலகளாவிய தற்காலத் தமிழ் கவிதைகள்

நமது மொழிபெயர்ப்பு உலகம்: உலகளாவிய தற்காலத் தமிழ் கவிதைகள் (In Our Translated World: Contemporary Global Tamil Poetry) என்ற நூல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலிருந்து திரட்டப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பாகும்.[1] இதை எழுதியவர்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளை சார்ந்தவர்களாக உள்ளனர். "பெண்கள் மற்றும் ஆண்கள், இளம் வயதினர், இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் போன்ற பலதரப்பட்டவர்கள் இதில் அடங்குவார்கள். அதேபோல், அவர்களின் பின்னணியும் அனுபவங்களும் வெவ்வேறானவை.[2]

நமது மொழிபெயர்ப்பு உலகம்: உலகளாவிய தற்காலத் தமிழ் கவிதைகள்
பதிப்பாசிரியர்செல்வ கனகநாயகம்
நூலாசிரியர்கள்78 கவிஞர்கள்
மொழிபெயர்ப்பாளர்அனுசுயா ராமசாம்ய், மைதிலி தயாநிதி மற்றும் எம்.எல்.தங்கப்பா.
நாடு
மொழிஆங்கிலம், தமிழ்
வகைகவிதைகள்
வெளியீட்டாளர்தமிழ் இலக்கியத் தோட்டம் மற்றும் ட்சார் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2013
ஊடக வகைநூல்
பக்கங்கள்269
ISBN1927494362

சிகாகோ பல்கலைக்கழகத்தின் தென் இந்திய ஆய்வுத் துறையின் சாச்சா எபெலிங் என்ற பேராசிரியர் "தமிழ் கவிதைகளின் மொழிபெயர்ப்புகளில் முந்திய எப்போதும் இது போன்ற முன் மாதிரிகள் எழுதப்படவில்லை எனவும், கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ் இலக்கியம் ஒரு உண்மையான உலகளாவிய விவகாரமாக மாறியுள்ளது என்ற உண்மையை இன்றுவரை வேறு எந்த புத்தகமும் நிரூபிக்கவில்லை" எனவும் இந்த வேலைப்பாட்டின் முக்கியத்துவத்தை பற்றி கூறுகிறார்.[3] நமது மொழிபெயர்ப்பு உலகம் என்ற நூல் ஓன்டாரியோ அரசின் நிதியுதவியுடன் ஒன்றாரியோ ட்ரில்லியம் அறக்கட்டளை மற்றும் பிறருடைய முயற்சியாலும் "தமிழ் இலக்கியத் தோட்டம்" என்ற அமைப்பு வெளியிட்ட வெற்றிகரமான ஒரு தொகுப்பாகும்.[2] இந்நூல், டொரான்டோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகள் மையத்தின் இயக்குநரும் ஆங்கிலத் துறையின் பேராசிரியருமான செல்வ கனகநாயகம் என்பவரால் திருத்தப்பட்டது.[4][1] இந்த புத்தகம் 2014 மார்ச் 9 அன்று ஸ்கார்பாரோ மாநாட்டு மையத்தில் வெளியிடப்பட்டது.[5]

தேர்வு மற்றும் மொழிபெயர்ப்பு

தொகு

தேர்வு குழுவில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இருந்தனர். இதில் மோகனரங்கன், சுகுமாரன், ஏ. ஏசுராசா, செல்வம் அருணானந்தம், உஷா மதிவாணன், திருமாவளவன், எஸ். யுவராஜன், லதா மற்றும் அன்னார் போன்றோர் இதில் அடங்குவர்.[6]அனுசுயா ராமசாமி, மைதிலி தயாநிதி மற்றும் எம். எல். தங்கப்பா போன்றோர் இதன் மொழிப்பெயர்ப்பில் பணியாற்றினார்கள்.

கருப்பொருள்

தொகு

இக்கவிதைத் தொகுப்புகள் பல்வேறு தளங்களை உள்ளடக்கியதகும்.[7] நவீனம் மற்றும் பாரம்பரியம், அடக்குமுறை கலாச்சாரம், நகர்ப்புறங்களுக்கு மாற்றுவது, இலங்கை தமிழர்கள் மீதான பாலியல் தாக்குதல், வன்முறை, வறுமை, பெண்கள் பிரச்சினைகள், புலம்பெயர்ந்தோர் அனுபவங்கள் மற்றும் இருத்தலியல் போன்றத் தலைப்புகள் இக்கவிதைத் தொகுப்புகளில் அடங்கியது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Contemporary Global Tamil Poetry (Book Review)". www.sangam.org. Ilankai Tamil Sangam. 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  2. 2.0 2.1 "In Our Translated World". www.tamilculture.ca. TamilCulture. 2014. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  3. "In Our Translated World: Contemporary Global Tamil Poetry". www.tsarbooks.com. TSAR Books. 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  4. "Interview with the editor and Prof. Chelva Kanaganayakam and Tamil Poet and Prof. Cheran". www.youtube.com. TSAR Books. 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  5. "Monsoon Journal Article about In Our Translated World" (PDF). www.monsoonjournal.com. TSAR Books. 2014. Archived from the original (PDF) on 2014-03-25. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  6. 6.0 6.1 "வாசிப்பும், யோசிப்பும் 37 : எமது மாறிய உலகினுள் (In Our Translated World)". www.geotamil.com. Pathivukal. 2014. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.
  7. "Scott Edward Anderson about In Our Translated World". http://seapoetry.wordpress.com. TSAR Books. 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23. {{cite web}}: External link in |website= (help)