நமா கணவாய்
நமா கணவாய் (Nama Pass) என்பது இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். இதன் உயரம் 5,200 மீ.(17,100 அடி) ஆகும். இது இந்தியாவில் உத்தராகண்டு மாநிலத்தில், பித்தோரகார் மாவட்டத்தில், தெற்கு குமாயோன் பகுதியில் அமைந்துள்ளது.
நமா கணவாய் | |
---|---|
ஏற்றம் | 5,200 m (17,100 அடி) |
அமைவிடம் | இந்தியா |
மலைத் தொடர் | இமயமலை |
நமா கணவாய் குதி மற்றும் தர்மா பள்ளத்தாக்கை இணைக்கிறது. இது ஒரு காலத்தில் திபெத்திற்கு செல்லும் ஒரு பரப்பரப்பான சாலை, ஆனால் தற்பொழுது அரிதாகத் தான் பயன்பாட்டில் உள்ளது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Harlin, John, தொகுப்பாசிரியர் (2003). "Climbs and Expeditions: India". The American Alpine Journal. American Alpine Club Annual Resources (The Mountaineers Books): 365–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-930410-93-3.