நம்பிக்கைக்காக மன்றாட்டம்

2023 கத்தோலிக்க திருச்சபையின் பிரகடனம்

நம்பிக்கைக்காக மன்றாட்டம் (Supplicating Trust, Fiducia supplicans, பிடூசியா சப்ளிக்கன்சு)[1] என்பது கத்தோலிக்கக் கோட்பாட்டின் 2023 பிரகடனமாகும், இது ஒரே பாலின உறவுகளில் தனிநபர்களின் ஆசீர்வாதம் உட்பட, நியதிச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளாத இணையர்களை ஆசீர்வதிக்கக் கத்தோலிக்கக் குருமார்களை அனுமதிக்கிறது.[2][3] 2023 திசம்பர் 18 தேதியிடப்பட்டு, அதே நாளில் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், திரு ஆட்சிப்பீடத்தின் நம்பிக்கைக் கோட்பாட்டுத் துறை மூலம் வெளியிடப்பட்டு, திருத்தந்தை பிரான்சிசின் கையொப்பத்துடன் அங்கீகரிக்கப்பட்டது.[4][5] 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு இக்கோட்பாட்டுத் துறை வெளியிட்ட முதல் அறிவிப்பு இதுவாகும்.[6]

பிடூசியா சப்ளிகன்சு உடன்படிக்கை பலவிதமான விளக்கங்களைப் பெற்றது.[7] ஒரே பாலின இணையர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது என்பது, அவர்களின் ஒன்றிப்பு வாழ்வை அங்கீகரிப்பதன் அர்த்தமாகாது எனக் கூறுகிறது திருஅவையின் விசுவாசக்கோட்பாட்டுத் துறை.[8] இந்த வெளியீட்டுக்குப் பிறகு வத்திக்கான் அதிகாரத்துவத்தினர் "கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளைத்" தவிர்க்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு அறிவுறுத்தினார்.[9] ஒரே பாலின இணையர்களை ஆசீர்வதிப்பதைத் தடைசெய்த அதே திரு ஆட்சிப்பீடத்தின் முந்தைய 2021 தீர்ப்பின் தலைகீழாக பிடூசியா சப்ளிகன்சு உடன்படிக்கை பரவலாகப் பார்க்கப்படுகிறது.[9][10][11]

மேற்கோள்கள் தொகு

 1. Wooden, Cindy (18 December 2023). "Doctrinal dicastery explains how, when gay couples can be blessed". Catholic News Service. United States Conference of Catholic Bishops இம் மூலத்தில் இருந்து 18 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231218210406/https://www.usccb.org/news/2023/doctrinal-dicastery-explains-how-when-gay-couples-can-be-blessed. 
 2. Flynn, JD (2023-12-22). "Is the 'false narrative' narrative a false narrative?". The Pillar (in ஆங்கிலம்). Archived from the original on 23 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-23.
 3. Liedl, Jonathan (18 December 2023). "Vatican Says Priests Can Bless Same-Sex Couples Without Condoning Their Lifestyles". Catholic News Agency (in ஆங்கிலம்). Archived from the original on 20 December 2023.
 4. Faiola, Anthony; Pitrelli, Stefano (18 December 2023). "Pope Francis allows blessings of same-sex couples, shifting Vatican guidance". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/world/2023/12/18/same-sex-unions-vatican-pope/. 
 5. Pinedo, Peter (21 December 2023). "More bishops voice criticism—and support—for Vatican document on blessing same-sex couples". Catholic News Agency இம் மூலத்தில் இருந்து 23 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231223032913/https://www.catholicnewsagency.com/news/256343/more-bishops-voice-criticism-and-support-for-vatican-document-on-blessing-same-sex-couples. 
 6. Hudson, Patrick (18 December 2023). "DDF declaration opens door to blessings for 'irregular' couples". The Tablet இம் மூலத்தில் இருந்து 19 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231219064939/https://www.thetablet.co.uk/news/18063/ddf-declaration-opens-door-to-blessings-for-irregular-couples. 
 7. Pinedo, Peter (December 21, 2023). "More bishops voice criticism – and support – for Vatican document on blessing same-sex couples". Catholic News Agency (in ஆங்கிலம்). Archived from the original on 23 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-23.
 8. இறைவிருப்பதிற்கு, இறைத்திட்டத்திற்கு இயைந்ததான ஆசீர், வத்திக்கான் செய்திகள், 19 திசம்பர் 2023
 9. 9.0 9.1 Winfield, Nicole (21 December 2023). "After approving blessings for same-sex couples, Pope asks Vatican staff to avoid 'rigid ideologies'". AP News (in ஆங்கிலம்). Archived from the original on 21 December 2023. பார்க்கப்பட்ட நாள் 21 December 2023.
 10. Pullella, Philip (18 December 2023). "Vatican approves blessings for same-sex couples in landmark ruling". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/world/vatican-approves-blessings-same-sex-couples-under-certain-conditions-2023-12-18/. 
 11. Garver, Rob (19 December 2023). "Vatican Announcement on Same-Sex Blessings Pushes Boundaries". வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இம் மூலத்தில் இருந்து 21 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231221040742/https://www.voanews.com/a/vatican-announcement-on-same-sex-blessings-pushes-boundaries-/7405122.html. "The announcement ... titled “Fiducia Supplicans on the Pastoral Meaning of Blessings,” appears to overturn a 2021 ruling issued by the same office of the Vatican..." 

வெளி இணைப்புகள் தொகு