நயாகிரிசி

வங்காளதேச நாட்டில் மேற்கத்திய பூச்சிக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் பயன்பா

புதிய வேளண்மை இயக்கம் (New Agriculture Movement) வங்காளதேச நாட்டில் மேற்கத்திய பூச்சிக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகளின் பயன்பாட்டை எதிர்த்து நடைபெறும் ஓர் இயக்கமாகும். வங்காள மொழியில் இவ்வியக்கத்தை நயாகிரிசி என்று அழைக்கிறார்கள்.[1]

பூச்சிக்கொல்லிகள் மற்றும் நூற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்தி பயிர்கள் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு ஆளாக நேரிடும் என்ற நம்பிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. [2]

உடல்நலக் கவலைகளுக்கு மேலதிகமாக, நயாகிரிசி இயக்கம் கரிம வேளாண்மையையும் களைகளாகக் கருதப்படும் தாவரங்களின் உணவு மற்றும் விலங்கு தீவனத்திற்கான பயன்பாட்டையும் வலுவாக ஊக்குவிக்கிறது.[3] மேலும் இவ்வியக்கம் தன்னிறைவை மேம்படுத்துவதாகவும், மேற்கத்திய மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வங்காளதேசத்தை விலக்குவதாகவும் கருதப்படுகிறது. [4]

பெண்களை ஆதரிப்பதில் நயாகிரிசி இயக்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. ஏழை பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கால்நடைகளை வழங்கும் திட்டத்தை செயற்படுத்துகிறது. கன்று ஈனும் வரை ஒரு பசு அக்குடும்பத்தில் இருக்கும். பின்னர் பசு மற்றொரு குடும்பத்திற்கு அனுப்பப்படும்.[3] உள்ளூர் பயிர் வகைகளிலிருந்து விதைகளை சேகரிக்க மகளிர் விதை வலையமைப்பும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.. [4]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bangladesh: the seeds of change". 
  2. Rothenberg, David (2005). Writing the world: on globalization. MIT Press. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-18245-4.
  3. 3.0 3.1 "To measure poverty, you may have to go chak". The Hindu Business Line. 27 September 2007. http://www.thehindubusinessline.com/2007/09/27/stories/2007092750650900.htm. பார்த்த நாள்: 2009-04-23. "To measure poverty, you may have to go chak". The Hindu Business Line. 27 September 2007. Retrieved 2009-04-23.
  4. 4.0 4.1 Reed, Ananya Mukherjee (2008). Human Development and Social Power: Perspectives from South Asia. Taylor & Francis. pp. 129–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-77552-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயாகிரிசி&oldid=3538593" இலிருந்து மீள்விக்கப்பட்டது