நயினாதீவு வீரபத்திரப் பெருமான் ஆலயம்
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலயம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அமைந்துள்ளது.
நயினா தீவில் அமைந்துள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஷ்வரி பீடம் அமைந்துள்ளது. இப்பீடமே அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் ஆகும். இவ்வாலயம் அமைந்துள்ள பகுதியின் மேற்கே தம்பகைப்பதி என்னும் இடத்தில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலய வரலாறு
தொகுமுந்நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகக் கருதப்படும் இவ்வாலயம் ஆலமரம் ஒன்றின் கீழ் சிறு ஆலயமாகவிருந்து வீரவாகு கோவில் என அழைக்கப்பட்டு வந்து பின்னர் மூத்தபண்டாரம், இளைய பண்டாரம் ஆகிய இரு சகோதரர்களால் மடாலயமாக்கப்பட்டு பூஜை, வேள்விகள், ஆராதனைகள் நடைபெற்று வந்ததெனச் சான்றுகள் விளக்குகின்றன. ஆணவம் மேலிட்டு செருக்குடன் விளங்கிய தக்கனைத் தண்டிக்க எழுந்தருளியதே வீரபத்திர மூர்த்தம் எனப் புராணங்கள் விளக்குகின்றன.
ஆலய தொன்நம்பிக்கைகள்
தொகுஆணவ மலம் நீங்கி நல்லருள் பெற அருள் அளிப்பவராக ஸ்ரீ வீரபத்திரப் பெருமானை வணங்குவர் மக்கள். இவரை வழிபடும் அனைவரும் சகல நன்மைகளும் பெற்றுக்கொள்ள இயலும் என்பது தொன்நம்பிக்கை. முற்காலங்களில் கன்னிப்பெண்கள், கர்ப்பிணிகள், ஆசௌசிகள் போன்றோர் இவ்வாலயத்திற்கருகாமையிலும், நடுநிசியிலும், சந்தியிலும் செல்வதில்லை என்பதும் அவ்வாறு செல்பவர்கள் துன்பப்பட நேரிட்டதாக கர்ணபரம்பரைக் கதைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஊர் மக்கள் தம்மால் களவு கொடுக்கப்பட்ட பொருள்கள் கிடைக்கவேண்டும் என இக்கோவிலில் பறைசாற்றி இழை கட்டுவர். பின்னர் அப்பொருட்கள் கிடைக்கப்பெற்றதென்பதும் குறிப்பிடத்தக்கன.
ஆலய விழாக்கள்
தொகுவருடந்தோறும் ஆனி மாதத்தில் கந்த புராணம் படித்துப் பயன்சொல்லி வேல் பூசைவிழா சிறப்பாக நடைபெறும். பிரமோற்சவம் பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெறும். 9ம் நாளன்று தேர்த்திருவிழாவும் அதற்கடுத்த நாளான மாசி மகத்தன்று தீர்த்தோற்சவமும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது