நயீம் அசன்
முகமது நயீம் ஹசன் (Mohammad Nayeem Hasan பிறப்பு: டிசம்பர் 2, 2000 ஒரு வங்காள தேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வங்காளதேசத்துக்கு துடுப்பாட்ட அணிக்காக இதுவரை இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2017 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2017 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் வங்காளதேச அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 356 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 274 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணி , வங்காளதேச அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். [1] அக்டோபர் 10, 2015 அன்று 2016–17 ஆம் ஆண்டிற்கான தேசிய துடுப்பாட்ட லீக்கில் இவர் சிட்டகாங் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார் . அப்போது இவருக்கு வயது பதினேழு ஆண்டுகள் 356 நாட்கள். முதல் போட்டியில் முதல் ஆட்ட பகுதியில் ஐந்து விளக்குகளை கைப்பற்றினார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் ஐந்து இலக்குகளை கைப்பற்றிய வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[3][4]
உள்ளூர் துடுப்பாட்ட போட்டி
தொகு2017–18 வங்காளதேச பிரீமியர் லீக்கில் 29 நவம்பர் 2017 அன்று சிட்டகாங் வைக்கிங் துடுப்பாட்ட அணிக்காக இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். [5]
2017ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்கா லீக் துடுப்பாட்ட தொடரில் இவர் காசி துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 23 இலக்குகளை கைப்பற்றி அதிக இலக்குகளை கைப்பற்றிய காசி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[6]
அக்டோபர் 2018 இல், 2018–19 தேசிய கிரிக்கெட் லீக்கில், டாக்கா துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஆட்டப் பகுதியில் எட்டு இலக்குகளை வீழ்த்தினார். [7] [8] இவர் 2018–19 தேசிய கிரிக்கெட் லீக்கில் ஆறு போட்டிகளில் இருபத்தெட்டு இலக்குகளைக் கைப்பற்றி அதிக இழப்புகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார் . [9]
2018–19 வங்காளதேச பிரீமியர் லீக்கிற்கான வரைவு பட்டியலில் இடம் பெற்றததனைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், சிட்டகாங் வைக்கிங்ஸ் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார். [10] டிசம்பர் 2018 இல், 2018–19 வங்காளதேச துடுப்பாட்ட லீக்கின் இறுதி சுற்று போட்டிகளில், மத்திய மண்டலத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கிழக்கு மண்டலத்திற்காக விளையாடினார். அந்தப் போட்டியில் இரண்டாவது ஆட்ட பகுதியில் 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து எட்டு இலக்குகளை வீழ்த்தினார். [11] ஆகஸ்ட் 2019 இல், வங்காளதேச துடுப்பாட்ட வாரிய 35 வீரர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தது. அந்த வாரியம் அறிவிப்பு 35 வீரர்களில் ஒருவராக இருந்தார். [12]
சர்வதேச போட்டிகள்
தொகு2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் 19 வயதிற்குட்பட்ட வங்காளதேச அணி சார்பாக இவர் விளையாடினார். சனவரி மாதம் 2019 இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[13] [14]
குறிப்புகள்
தொகு- ↑ "Nayeem Hasan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
- ↑ "National Cricket League, Tier 2: Sylhet Division v Chittagong Division at Chittagong, Jan 3-6, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2017.
- ↑ "A happy homecoming for 17-year old Nayeem Hasan". ESPN Cricinfo. 23 November 2018. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.
- ↑ "1st Test: Bangladesh take 133-run lead vs West Indies as 17 wickets tumble on Day 2". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.
- ↑ "33rd match, Bangladesh Premier League at Chittagong, Nov 29 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
- ↑ "Dhaka Premier Division Cricket League, 2017/18: Gazi Group Cricketers". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "Young spinner Nayeem sizzles with eight-for in NCL". Dhaka Tribune. 22 October 2018. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
- ↑ "NCL: Top-order batsmen boost Khulna's day1 total 281/7* vs Rajshahi". United News Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
- ↑ "National Cricket League, 2018/19: Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 November 2018.
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Nayeem 10-for, Mominul, Yasir Ali tons give East Zone massive win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
- ↑ "Mohammad Naim, Yeasin Arafat, Saif Hassan - A look into Bangladesh's future". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 August 2019.
- ↑ "Saif Hassan likely to lead Bangladesh U-19 at World Cup". ESPN Cricinfo. 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2017.
- ↑ "Bangladesh pick uncapped Nayeem Hasan for first Sri Lanka Test". 26 January 2018. http://www.espncricinfo.com/story/_/id/22218738/bangladesh-pick-uncapped-nayeem-hasan-first-sri-lanka-test. பார்த்த நாள்: 26 January 2018.