நரசிங்க மிஸ்ரா
நரசிங்க மிஸ்ரா (Narasingha Mishra, ஒடியா: ନରସିଂହ ମିଶ୍ର; பிறப்பு: 23 திசம்பர் 1940) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] இவர் 15 வது ஒடிசா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
நரசிங்க மிஸ்ரா | |
---|---|
15 வது ஒடிசா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | பூபிந்தர் சிங் |
பின்னவர் | பிரதிபா குமார் நாயக் |
தொகுதி | பலாங்கீர் சட்டமன்றத் தொகுதி |
சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | பால்கோபால் மிஸ்ரா |
பின்னவர் | ராமகந்த சேத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 திசம்பர் 1940 பலாங்கீர், ஒடிசா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | குசும் மிஸ்ரா |
பிள்ளைகள் | 4 மகன்கள் |
தொழில் | வழக்கறிஞர், விவசாயி, அரசியல்வாதி |
2004-2009 வரை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவராக இருந்த நரசிங்க மிஸ்ரா 1990-ல் முதன்முதலாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட அமைச்சராக பணியாற்றினார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பலாங்கீர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்ப்பட்டார். அத்தேர்தலில் 71598 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பிஜு ஜனதா தளத்தின் அர்கேஷ் நாராயண் சிங் தியோ 66257 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.
பின்னணி
தொகுநரசிங்க மிஸ்ரா ஒடிசாவில் பலங்கிர் அருகே உள்ள சத்தமக்னா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை யுதிஷ்டிர் மிஸ்ரா வழக்கறிஞராகவும் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2] அரசியலை அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக கொண்ட குடும்பத்தில் பிறந்த மிஸ்ரா, 18 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து அரசியலில் நுழைந்து 1993 வரை அக்கட்சியில் தொடர்ந்தார். அந்த காலகட்டத்தில் பல கட்சிப் பதவிகளை வகித்த இவர் பல போராட்டங்களை வெற்றிகரமாக வழிநடத்தினார்.
மிகவும் வெற்றிகரமான வழக்கறிஞராக பணியாற்றிய இவர் அமைச்சராக இருந்த காலம் தவிர, வழக்கறிஞர் தொழிலை திறம்பட நடத்தினார்., விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய மாநில அரசுக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு காரணமாக இருந்தார். இது இவர் செய்த குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.[3]
அரசியல் வாழ்க்கை
தொகு1990ல் இவர் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பலகாலம் பலங்கீரின் அதிகார மையமாக கருதப்பட்டார். அவர் இப்பகுதியின் தற்போைதய மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் வழிகாட்டியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சட்ட அமைச்சராக,[4] இவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்று சிறப்பு நீதிமன்றங்கள் மசோதா ஆகும், இந்த மசோதா ஒடிசா உயர் அலுவல் இடங்களில் ஊழலுக்கு எதிராக போராடுவதை நோக்கமாகக் கொண்டது.
வகித்த பதவிகள்
தொகு- 1985 முதல் 1990 வரை ஒடிசா மாநில வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்.
- உறுப்பினர் 19வது சட்ட ஆணையம், அரசு இந்தியாவின்.
- இந்தோ-சோவியத்-கலாச்சார சங்கத்தின் மாநிலப் பிரிவின் துணைத் தலைவர்.
- சர்வதேச அமைதி கவுன்சிலின் மாநில பிரிவின் துணைத் தலைவர்.
- தலைவர், ஒடிசா சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு.
- தலைவர், ஒடிசா சட்டப் பேரவையில் தற்போதுள்ள நடைமுறை மற்றும் வணிக நடத்தை விதிகளை ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கும் சிறப்புக் குழு.
- பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ N.Mishra MLA Profile
- ↑ Y.Mishra debate
- ↑ "Orissa Resists Demand For Direct Paddy Purchase From Farmers" (in அமெரிக்க ஆங்கிலம்). 2002-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-03-03.
- ↑ 2004 result