நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்

தோக்கியோவின் பன்னாட்டு வானூர்தி நிலையம்

நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் , Narita International Airport, (成田国際空港 Narita Kokusai Kūkō?) (ஐஏடிஏ: NRTஐசிஏஓ: RJAA), அல்லது தோக்கியோ நரிட்டா வானூர்தி நிலையம் சப்பானில் தோக்கியோ பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் சிப்பா பிரிபெக்சரில் உள்ள நரிட்டா நகரில் தோக்கியோ தொடருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 57.5 km (35.7 mi) தொலைவிலும் நரிட்டா தொடருந்து நிலையத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 7 km (4.3 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.[3]

நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்

成田国際空港

Narita Kokusai Kūkō
Narita International Airport Logo.png
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (NAA)
சேவை புரிவதுதோக்கியோ பெருநகரப் பகுதி
அமைவிடம்நரிட்டா, சிப்பா பிரிபெக்சர், ஜப்பான்
மையம்
உயரம் AMSL135 ft / 41 m
இணையத்தளம்www.narita-airport.jp
நிலப்படம்
NRT is located in யப்பான்
NRT
NRT
சப்பானில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
16R/34L[1] 4,000 13,123 அசுபால்ட்டு
16L/34R 2,500 8,202 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2019)
பயணிகள்44,344,739
சரக்கு டன்கள்2,039,905
வானூர்தி இயக்கங்கள்264,115
மூலங்கள்: சப்பானிய நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் [2]
நரிட்டா நிலைய வான்கட்டுப்பாட்டுக் கோபுரம்

நரிட்டா நிலையம் சப்பானின் பெரும்பான்மையான பன்னாட்டு வான்பயணச் சேவைகளை மேற்கொள்கிறது; ஆசியாவிற்கும் அமெரிக்காக்களுக்கும் இடையேயான வான் போக்குவரத்திற்கு முதன்மை இணைப்புப் பாலமாகவும் விளங்குகிறது. 2007ஆம் ஆண்டில் இந்த நிலையத்தை 35,478,146 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.[4] இது சப்பானின் இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[4]சப்பானின் வான் சரக்கு மையங்களில் மிகவும் நெருக்கடி மிகுந்ததாக உள்ளது.[5] உலகளவில் மிகுந்த வான் சரக்கு கொண்டு செல்லும் வானூர்தி நிலையங்களில் ஒன்பதாவதாக உள்ளது.[5] சப்பானின் தேசிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனமான சப்பான் ஏர்லைன்ஸ், ஆல் நிப்பான் ஏர்வேஸ், நிப்பான் கார்கோ ஏர்லைன்ஸ், மற்றும் குறைந்த கட்டண வான்பயணச் சேவையாளர்களான ஜெட்ஸ்டார் சப்பான் மற்றும் ஏர் ஆசியா சப்பான் நிறுவனங்களுக்கு பன்னாட்டு முனைய மையத்தளமாக விளங்குகிறது. மேலும் அமெரிக்க வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களான டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்சுக்கு ஆசியாவிற்கான முனைய மையமாக அமைந்துள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்சான்றுகள்தொகு

  1. Narita's 4,000-மீட்டர் (13,123 ft) main runway shares the record for longest runway in Japan with one at Kansai International Airport that opened in 2007.
  2. "Narita Airport Traffic Statistics -2019 (Jan-Dec)" (PDF). Narita International Airport. January 2020. April 12, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. AIS Japan
  4. 4.0 4.1 "ACI passenger statistics for 2007". 2012-04-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-26 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "ACI cargo statistics for 2008". 2012-03-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-26 அன்று பார்க்கப்பட்டது.