நர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள்

நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காடுகள் மத்திய இந்தியாவில் உள்ள வெப்ப வலய, துணை வெப்பவலய வறண்ட அகன்ற இலைக் காடுகள் சூழலியல் மண்டலம் ஆகும். இச் சூழலியல் மண்டலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. எனினும் இதன் பகுதிகள் சட்டிஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன.[1]

அமைவு தொகு

நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காடுகள், கீழ் நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு, சூழவுள்ள மேட்டுநிலங்கள் ஆகியவற்றில் 169,900 சகிமீ (65,600 சதுரமைல்) பரப்பளவில் அமைந்துள்ளன. நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு-மேற்காக அமைந்த, தட்டையான அடியையுடைய ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது இரண்டு மேட்டுநிலங்களைப் பிரிக்கின்றது. விந்திய மலைத்தொடர் நர்மதைப் பள்ளத்தாக்கின் வடக்கு எல்லையாகும். இம் மலைத்தொடர், நர்மதைப் பள்ளத்தாக்கை மால்வா மேட்டுநிலம், புந்தேல்கண்ட் உயர்நிலம் ஆகியவற்றிலிருந்து பிரிக்கிறது. நர்மதைப் பள்ளத்தாக்கின் தெற்கு எல்லையில் உள்ள சத்புரா மலைத்தொடர் இப் பள்ளத்தாக்கை தக்காண மேட்டுநிலத்தில் இருந்து பிரிக்கிறது. இச் சூழலியல் மண்டலம் சத்புராவின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதோடு, தென்கிழக்கு நோக்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியோரம் விரிவடைகிறது.


இச் சூழலியல் மண்டலத்தின் மழைவீழ்ச்சி பருவகாலத்தை ஒட்டியது. ஏழு தொடக்கம் எட்டு மாதகால வறண்ட பருவகாலத்தைத் தொடர்ந்து, ஜூன் - செப்டெம்பர் மாத காலப்பகுதியில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் மழை பெய்கிறது. இம் மழைவீழ்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 1,200 - 1,500 மிமீ அளவு உள்ளது. நீண்ட வறண்ட காலத்தில் நீர் இழப்பைத் தவிர்ப்பதற்காகப் பல மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்துவிடுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.worldwildlife.org/ecoregions/im0207 The Narmada Valley Dry Deciduous Forests [IM0207]