நறவம்
நறவம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Luvunga scandens
|
இருசொற் பெயரீடு | |
Luvunga scandens (Roxb.) Buch.-Ham. ex Wight & Arn. | |
வேறு பெயர்கள் | |
Limonia scandens Roxb. |
நறவம் என்பது ஒரு மலர்.[1]
- நறவம்பூ கொத்துக்கொத்தாகப் பூக்கும்.[2]
- சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று நறவ-மலர்.[3]
- தேன்
- நறவம் என்னும் சொல் மலரிலுள்ள தேனை உணர்த்துகிறது.[4]
- கள்
நறை
தொகுநறவம் மலரை நறை எனவும் வழங்கிவந்தனர்.
- நறை என்றாலே மணம் என்று பொருள்.[7]
- மலைக்குறவர் மக்கள் நறைக்கொடியை அறுத்தெறிவர்.[8]
- நறைக்காயை உருட்டி வேலன் குறி சொல்லுவான்.[9]
- புனத்தில் எரியும்போது மணக்கும்.[10]
- மணம் கமழும் கொடி.[11]
- கோலால் தட்டியும் நறைக்கொடியில் மணம் பெறுவர்.[12]
- தொழுவத்தைச் சுற்றிலும் நறைக்கொடி படர்ந்திருக்கும்.[13]
- ஏறு தழுவலின்போது காளைகளுக்கு நறைக்கொடி சுற்றிப் பாய விடுவர்.[14]
- மேகம் போல நறைக்கொடி பொங்கிப் படர்ந்திருக்கும்.[15]
- நறவம் பூ குளுமையானது.[16]
- கோடையில் நறைக்கொடி வாடிக் கிடக்கும்.[17]
- சந்தன மரத்தில் நறைக்கொடி படர்வது உண்டு.[18]
- நறை நாரில் பூத் தொடுப்பர்.[19]
- மாளிகைகளில் நறைக்கொடியைப் புகைத்து மணம் பரப்புவர்.[20]
- நீராடிய பின்னர் நறையைப் புகைத்துக் கூந்தலை உலர்த்துவர்.[21][22][23]
- விழாக்காலத்தில் இதன் மணத்தைப் பரப்புவர்.[24][25]
நறா
தொகுநறா என்பது பூவை விளையவைத்த ஒருவகைக் கள். நறாக் கள் அதில் இடும் பூமொட்டுகளுக்கு ஏற்பச் சிறப்பு எய்தும். [26]
இவற்றையும் காண்க
தொகுவெளியிணைப்புகள்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ நல்லிணர் நாகம், நறவம், சுரபுன்னை - பரிபாடல் 12-80
- ↑ ஊழ் இணர் நறவம் - பரிபாடல் 19-78
- ↑ குறிஞ்சிப்பாட்டு 91.
- ↑ மணிவண்டு காலைக் களிநறவம் தாது ஊத – சிலப்பதிகாரம் – 6 வெண்பா
- ↑ புறநானூறு - 292
- ↑ பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அரி நறவம் உகுப்ப - பரிபாடல் 6-49
- ↑ பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் - புறம் 235/18 நறு விரை துறந்த நறை வெண் கூந்தல் - புறம் 276/1
- ↑ குறவர் கொன்ற குறை கொடி நறை பவர் - நற்றிணை 5/3
- ↑ பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் - திருமுஊருகாற்றுப்படை 190
- ↑ நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை - குறுந்தொகை 339/1
- ↑ தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை - ஐங்குறுநூறு 276/2
- ↑ கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ - பரிபாடல் 17/6
- ↑ கொடி நறை சூழ்ந்த தொழூஉ - கலித்தொகை 103/21
- ↑ நறை வலம் செய விடா இறுத்தன ஏறு - கலித்தொகை 104/31
- ↑ ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க - கலித்தொகை 105/25
- ↑ நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில் - அகம் 242/18
- ↑ நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் - அகம் 257/2
- ↑ சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் - அகம் 282/9
- ↑ நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி - புறம் 168/15
- ↑ நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ - புறம் 281/6
- ↑ நன் நீராட்டி நெய் நறை கொளீஇய - புறம் 329/3
- ↑ நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே - பரிபாடல் 14/20
- ↑ நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் - பொருநராற்றுப்படை 238
- ↑ நறையும் விரையும் ஓச்சியும் அலவு_உற்று - குறிஞ்சிப்பாட்டு 7
- ↑ நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப - கலித்தொகை 101/12
- ↑ தம்தம் நனையினான் நந்தும், நறா. (நான்மணிக்கடிகை 47)