நலமாத பத்மாவதி ரெட்டி

இந்திய அரசியல்வாதி

நலமாத பத்மாவதி ரெட்டி (Nalamada Padmavathi Reddy) தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோதாட் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.

நலமாத பத்மாவதி ரெட்டி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2 ஜுன் 2014-11 டிசம்பர் 2018
தொகுதிகோதாட் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகட்வால், தெலுங்கானா
துணைவர்நளமதா உத்தம் குமார் ரெட்டி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

இவர் கட்டிடக்கலை பட்டதாரி ஆவார். மேலும் இவர், ஐதராபாத்தின் இரிஷி வேலி பள்ளியிலும், ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் மாணவியாகவும் இருந்தார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்அலங்கார வடிவமைப்பையும் பயின்றார்.[1][2]

அரசியல் வாழ்க்கை தொகு

பத்மாவதி, கோதாட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முதல் பெண் போட்டியாளராக இருந்தார்.[3] 2014 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலின் போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை 13,374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் அமைச்சருமான நளமதா உத்தம்குமார் ரெட்டியினை இவர் திருமணம் செய்து கொண்டார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. They come from diverse backgrounds
  2. Profile
  3. Uttam’s wife Kodad’s 1st woman contestant[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Kodad Results". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
  5. Uttam wangles Kodad Assembly ticket for wife
"https://ta.wikipedia.org/w/index.php?title=நலமாத_பத்மாவதி_ரெட்டி&oldid=3926429" இலிருந்து மீள்விக்கப்பட்டது