நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டம்
தமிழ்நாடு அரசு வறுமையில் வாடும் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
உதவிக்கான தகுதிகள்
தொகு- இயல், இசை, நாடகம் எனும் ஏதாவது துறையில் செயல்பட்டு குறிப்பிடத்தக்க கலைச்சேவை செய்தவராக இருத்தல் வேண்டும்.
- கலைஞர்கள் 58 வயது முழுமையாகி இருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூபாய் 4800க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை
தொகு- நிதியுதவியாக மாதந்தோறும் ரூபாய் 500 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க
தொகுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பயனாளிகள் தேர்வு
தொகுஇயல், இசை நாடகமன்றச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பரிந்துரைப்படி அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவால் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு கலைஞர்களைத் தேர்வு செய்து நிதியுதவி அளிக்கப்படுகிறது.