நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (Peoples Movement for Good Governance, PMGG) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது 2006 ஆம் ஆண்டு கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் உருவாக்கப்பட்டது.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 40 உறுப்பினர்களைக் கொண்ட சூறாசபை என்று அழைக்கப்படும் நிறைவேற்றுக்குழுவைக் கொண்ட ஒரு சமூக அரசியல் இயக்கமாகும். தேர்தலின் மக்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள நகரசபை உறுப்பினர்கள், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்பதால் இவர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் முதல் அனைத்தும் மக்களுக்கே சொந்தமானது என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மீள் அழைப்பு (Re-calling) முறை மூலம் காலத்துக்குக் காலம் அழைக்கப்பட்டு வேறு பிரதிநிதிகள் நகரசபைக்கு அனுப்பப்பட்டு வருகின்றார்கள்.

நகரசபைத் தேர்தல்களில்

தொகு

இக்கட்சி 2006 ஆம் ஆண்டில் காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நகரசபைத் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு இரண்டு உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதிகளாகக் கொண்டது.

மாகாணசபைத் தேர்தல்களில்

தொகு

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் சார்பில் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அயூப் அஸ்மின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலதிக உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு 1வது வட மாகாண சபைக்குத் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2] இவருக்கு வட மாகாணத்தின் முசுலிம்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணம் தொடர்பாக முதலமைச்சருக்கான ஆலோசகராக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு