நவக்கிரகக் கோயில்கள்
(நவக்கிரக தலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நவக்கிரகக்கோயில்கள் இது இந்தியாவின் தமிழ்நாட்டில் இந்துக்களின் சைவ சமய வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் தனியாக உள்ள சிறப்பு மிக்க கோயில்களைக் குறிப்பதாகும்.
- சூரியனார் கோவில்- சூரியன் - சூரியனார் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்)
- திங்களூர் கைலாசநாதர் கோயில் - சந்திரன் - திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
- வைத்தீஸ்வரன் கோயில் - செவ்வாய் - வைத்தீஸ்வரன் கோவில் (மயிலாடுதுறை மாவட்டம்)
- திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் - புதன் - திருவெண்காடு (மயிலாடுதுறை மாவட்டம்)
- ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் - குரு - ஆலங்குடி (திருவாரூர் மாவட்டம்)
- கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்- சுக்கிரன் - கஞ்சனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
- திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - சனி - திருநள்ளாறு (காரைக்கால்) (புதுச்சேரி)
- திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் - ராகு - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்)
- கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் - கேது - கீழப்பெரும்பள்ளம் (மயிலாடுதுறை மாவட்டம்)
சிறப்புக் கோயில்கள்
தொகு- திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் நவக்கைலாயக் கோயில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவக் கோயில்கள் நவதிருப்பதி எனும் பெயரில் அழைக்கப்படுகின்றன.
- இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நவக்கிரகக்கோயில் நவபாஷாணம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு