நவமணிமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். நவம் என்னும் வடமொழிச் சொல் தமிழில் ஒன்பது என்பதைக் குறிக்கும். எனவே நவமணிமாலை என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள்படும். இதற்கு ஏற்ப, நவமணிமாலை வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் பாவினங்களும் சேர்ந்து அமைந்த ஒரு சிற்றிலக்கியம். இது அந்தாதியாகவே அமையும் என்பது பாட்டியல் இலக்கணம்[1].

குறிப்புகள்

தொகு
  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவமணிமாலை&oldid=4096341" இலிருந்து மீள்விக்கப்பட்டது