பாவினம் என்பது ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாக்களுக்கும் இனமாக உருவம் பெற்ற பாடல்கள். அவை தாழிசை, துறை, விருத்தம் என மூன்று வகைப்படும்.[1]

அடிக்குறிப்பு
தொகு
 1. தாழிசை துறையே விருத்தம் என்றிவை
  பாவினம் பாவொரு பாற்பட் டியலும். (யாப்பருங்கலம் நூற்பா)

  வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை
  என்றிம் முறையின் எண்ணிய மும்மையும்
  தத்தம் பெயரால் தழுவும் பெயரே’. என்றார் காக்கைபாடினியார்.

  ‘பாவே தாழிசை துறையே விருத்தமென
  நால்வகைப் பாவும் நானான் காகும்’. என்றார் சிறுகாக்கைபாடினியார்.

  ‘வெண்பாத் தாழிசை வெண்டுறை விருத்தமென்
  றிந்நான் கல்ல முந்நான் கென்ப’. என்றார் அவிநயனார்.

  ‘ஒத்தா ழிசைதுறை விருத்தம் எனப்பெயர்
  வைத்தார் பாவினம் என்ன வகுத்தே’. என்றார் மயேச்சுரர். யாப்பருங்கலம் பக்கம் 233, 234

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவினம்&oldid=1733509" இலிருந்து மீள்விக்கப்பட்டது