நவமணிமாலை
(நவமணி மாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நவமணிமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். நவம் என்னும் வடமொழிச் சொல் தமிழில் ஒன்பது என்பதைக் குறிக்கும். எனவே நவமணிமாலை என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள்படும். இதற்கு ஏற்ப, நவமணிமாலை வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் பாவினங்களும் சேர்ந்து அமைந்த ஒரு சிற்றிலக்கியம். இது அந்தாதியாகவே அமையும் என்பது பாட்டியல் இலக்கணம்[1].
குறிப்புகள்
தொகு- ↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837
உசாத்துணைகள்
தொகு- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்