நவரத்தன்கர்

நவரத்தன்கர் (Navratangarh) தோய்சாகர் எனவும் அறியப்படும் இந்நகரம் நாகவன்ஷி மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது இந்திய மாநிலமான சார்க்கண்டுவின்] ஓர் பகுதியாக இருக்கிறது. இது கும்லா மாவட்டத்தின் சிசாய் தொகுதியில் அமைந்துள்ளது. நாகவன்ஷி மன்னர் பைரிசால் தனது தலைநகரை குக்ராகரில் இருந்து நவரத்னகருக்கு மாற்றினார். இங்குள்ள கோட்டையை மன்னர் துர்ஜன் சால் கட்டினார் . [1] [2] [3] [4] இந்த அரண்மனை அகழிகளால் சூழப்பட்ட ஐந்து மாடி அமைப்பாக இருந்தது. மேலும், இது ஒரு அரசவை, ஒரு கருவூலம், நிலவறையுடன் ஒரு சிறைச்சாலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. [5] [6]

நவரத்தன்கர்
நவரத்தன்கர் கோட்டை
அமைவிடம்சிசாய், கும்லா, சார்க்கண்டு, இந்தியா
ஆள்கூற்றுகள்23°06′36″N 84°47′01″E / 23.10993°N 84.78367°E / 23.10993; 84.78367
பரப்பளவு11 ha (27 ஏக்கர்கள்)
கட்டப்பட்டது17ஆம் நூற்றாண்டு
கட்டிடக்கலைஞர்துர்ஜன் சால்
நவரத்தன்கர் is located in சார்க்கண்டு
நவரத்தன்கர்
சார்கண்டுவில் நவரத்தன்கரின் அமைவிடம்
நவரத்தன்கர் is located in இந்தியா
நவரத்தன்கர்
நவரத்தன்கர் (இந்தியா)

அமைவிடம்

தொகு

கும்லா மாவட்டத்தின் சிசாய் தொகுதியில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இது கும்லாவிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும் ராஞ்சியில் இருந்து 75 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. [7] [8]

வரலாறு

தொகு

இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில் மன்னன் துர்ஜன் சால் என்பவரால் கட்டப்பட்டது. முகலாய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் இக் கோட்டையை கட்ட முடிவு செய்தார். காடுகள், மலைகள் மற்றும் ஆறுகளால் சூழப்பட்டதால் நவரத்தன்கர் ஒரு மூலோபாய இடத்தில் இருந்தது. [6][9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Eye on Nagvanshi remains - Culture department dreams of another Hampi at Gumla heritage site". telegraphindia. 7 May 2009.
  2. "Treasure of history lies unattended in Gumla". dailypioneer. 12 January 2017.
  3. "Gumla City History-Importance-Origin-Architecture". hoparoundindia. Archived from the original on 15 April 2016. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
  4. "The Lost Kingdom of Navratangarh". indianvagabond.
  5. "The Nagbanshis And The Cheros". archive.org.
  6. 6.0 6.1 "Seat of Nagvanshi kings gets ASI protection". https://www.dailypioneer.com/2019/pioneer-exclusive/seat-of-nagvanshi-kings-gets-asi-protection.html. 
  7. "Eye on Nagvanshi remains - Culture department dreams of another Hampi at Gumla heritage site". telegraphindia. 7 May 2009."Eye on Nagvanshi remains - Culture department dreams of another Hampi at Gumla heritage site". telegraphindia. 7 May 2009.
  8. "Treasure of history lies unattended in Gumla". dailypioneer. 12 January 2017."Treasure of history lies unattended in Gumla". dailypioneer. 12 January 2017.
  9. "धर्म, कला और वास्तुशिल्प की अनूठी कीर्ति है नवरत्न गढ़". https://www.jagran.com/jharkhand/gumla-navratan-garh-is-centre-of-religion-art-and-sculpture-19637206.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவரத்தன்கர்&oldid=3128521" இலிருந்து மீள்விக்கப்பட்டது