நவாபு அல்-அகுமது அல்-ஜாபிர் அல்-சபா
நவாப் அல்-அகமது அல்-ஜாபிர் அல்-சபா ( அரபு மொழி: الشيخ نواف الأحمد الجابر الصباح நவாப் அல்-அஹ்மத் அல்-ஜபீர் அல்-சபா, 25 ஜூன் 1937) குவைத்தின் அமீரும் 2020 முதல் குவைத் இராணுவப் படைகளின் தளபதியும் ஆவார். 2020 செப்தெம்பர் 29 அன்று தனது ஒன்று விட்ட சகோதரர் சபா அல்-அகுமது அல்-ஜாபிர் அல்-சபா இறந்ததைத் தொடர்ந்து அவர் அரியணைக்கு உரியவரானார். அல்-சபா குடும்பத்தின் பாரம்பரியத்திற்கு எதிராக நவாப் 2006 பெப்புருவரி 7 அன்று பட்டத்து இளவரசராக பரிந்துரைக்கப்பட்டார். அதன்படி அமீர் அலுவலகமும் பட்டத்து இளவரசர் அலுவலகமும் அல்-ஜாபிர், அல்-சாலிம் மரபுகளுக்கு இடையில் மாற்றாக இருக்க வேண்டும்.[1][2]
நவாபு அல்-அகுமது அல்-ஜாபிர் அல்-சபா | |
---|---|
குவைத்தின் அமீர் | |
ஆட்சிக்காலம் | 2020 செப்தெம்பர் 30 – தற்போது வரை |
முன்னையவர் | சபா அல்-அகுமது அல்-ஜாபிர் அல்-சபா |
குவைத் பிரதம அமைச்சர் | சபா அல்-காலிது அல்-சபா |
பிறப்பு | 25 சூன் 1937 குவைத் நகரம், குவைத் |
துணைவர் | சரீபா சுலைமான் அல்-ஜாசிம் |
குழந்தைகளின் பெயர்கள் | அகமது பைசல் அப்துல்லா சலீம் சேக்கா |
மரபு | சபா இல்லம் |
தந்தை | அகுமத் அல்-ஜாபிர் அல்-சபா]] |
தாய் | யமாமா |
ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்
தொகுசைகு நவாப் அல்-அகமது அல்-ஜாபிர் அல்-சபா 1937 ஆம் ஆண்டு யூன் மாதம் 25 ஆம் நாள் பிறந்தார்.[3] அவர் குவைத்தின் 10 வது ஆட்சியாளரான சைகு அகுமது அல்-ஜாபிர் அல்-சபாவின் மகன் ஆவார்.[4] குவைத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் படித்தார்.[5]
தொழில்
தொகுசைகு நவாப் சபா சபையின் மிக மூத்த சேவை உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார். மேலும் 58 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புக்களில் குவைத்துக்கு சேவை செய்து வருகிறார். 25 வயதில், இவர் 1962 ஆம் ஆண்டு பெப்புருவரி 21 ஆம் நாள் ஹவல்லியின் ஆளுநராக நியமிக்கப்பட்டு 1978 மார்ச்சு 19 வரை பதவியில் இருந்தார்.[6] 1978 ஆம் ஆண்டு அவர் உள் துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார் [7][8] மேலும் அவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட 1988 ஜனவரி 26 வரை இந்தப் பதவியை வகித்தார்.[9] குவைத் விடுதலையைத் தொடர்ந்து, சைகு நவாப் 1991 ஏப்ரல் 20 அன்று தொழிலாளர், சமூக விவகாரங்களுக்கான செயல் அமைச்சராக நியமிக்கப்பட்டு 1992 ஒற்றோபர் 17 வரை பதவியில் இருந்தார்.
1994 ஆம் ஆண்டு ஒற்றோபர் 16 அன்று சைகு நவாப் குவைத்தின் தேசிய காவலர் படையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு 2003 வரை அந்தப் பதவியில் இருந்தார்.[8][10][11][12] அதே ஆண்டு சைகு நவாப் மீண்டும் உள் துறை அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது முதல் 2003 ஆம் ஆண்டு ஒற்றோபர் 16 ஆம் நாள் குவைத்தின் துணைப் பிரதமர் [13] பதவியையும் உள் துறை அமைச்சர் பதவியையும் ஏற்றுக்கொள்ள அமீரிய ஆணை வழங்கப்படும் வரை இந்தப் பொறுப்பில் இருந்தார்.[7]
தலைமைத்துவம்
தொகுவளைகுடாவினதும் அரபு நாடுகளினதும் அரபு நாடுகளுக்கான ஒத்துழைப்புக் குழுவில் மத்தியில் தேசிய ஒற்றுமையை ஆதரிக்கும் திட்டங்களை சைகு நவாப் முக்கிய பங்கு வகித்தார்.[14]
குவைத்தின் அமீர்
தொகு29 ஜனவரி 2006 அன்று குவைத் தலைமையில் சைகு சபா அல்-அகுமத் அல்-ஜாபிர் அல்-சபா பதவியேற்றவுடன் அதிகாரப்பூர்வமாக சைகு நவாப்பை முடிக்குரிய இளவரசராக நியமித்து 2006 பெப்புருவரி 7 அன்று அமீரிய ஆணை வெளியிடப்பட்டது,.[8] சைகு சபா 2020 செப்தெம்பர் 29 அன்று இறந்தார். நவாப் குவைத்தின் அமீராக அறிவிக்கப்பட்டார்.[15][16]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசைகு நவாப் சுலைமான் அல்-ஜாசிம் அல்-கானிமின் மகள் சரீபா சுலைமான் அல்-ஜாசிம் அல்-கானிமை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[5][17]
குறிப்புகள்
தொகு- ↑ "Kuwait's emir dies, triggering leadership change in major OPEC producer | S&P Global Platts". www.spglobal.com (in ஆங்கிலம்). 29 September 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ "Crown Prince Nawaf Ahmed Jaber Al-Sabah crowned after Kuwait's Emir dies at 91". The Nation (in ஆங்கிலம்). 29 September 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ "HH Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah is the new Emir of Kuwait | THE DAILY TRIBUNE | KINGDOM OF BAHRAIN". DT News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ "Kuwait: Sheikh Nawaf al-Sabah succeeds his late brother as emir". Middle East Eye (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ 5.0 5.1 "Who is Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah?". AlKhaleej Today (in அரபிக்). 29 September 2020. Archived from the original on 4 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ حدث في مثل هذا اليوم في الكويت دخل في 21 فبراير 2009
- ↑ 7.0 7.1 Official website of the Kuwaiti Ministry of Interior, (Section Arabic/English Read)
- ↑ 8.0 8.1 8.2 السيرة الذاتية لسمو الشيخ نواف الاحمد الجابر الصباح، وكالة الأنباء الكويتية كونا – نشر في 7 فبراير 2006، دخل في 11 أبريل 2010
- ↑ List of Kuwait Defense Ministers; Knights of the Kuwait Armed Forces(in Arabic)
- ↑ "Official website of the Kuwaiti National Guard, (Section Arabic Read)". Archived from the original on 16 July 2006. பார்க்கப்பட்ட நாள் 8 October 2014.
- ↑ [1] Kuwait National Guard Archives, His Highness Sheikh Nawaf Ahmad Al-Jaber Al-Sabah with His Royal Highness Mutaib bin Abdullah in 2001; Retrieved 7 March 2015
- ↑ [2]Kuwait National Guard Archives, His Highness Sheikh Nawaf Ahmad Al-Jaber Al-Sabah, Retrieved 7 March 2015
- ↑ "Crown Prince Sheikh Nawaf Al-Ahmed Al-Jaber Al-Sabah". Global Security. பார்க்கப்பட்ட நாள் 24 October 2014.
- ↑ "Kuwait: Sheikh Nawaf Al Ahmed Al Sabah appointed Emir". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
- ↑ "Kuwait's Emir Sheikh Sabah dies at age 91". Al Jazeera. 29 September 2020.
- ↑ "Crown Prince Sheikh Nawaf Becomes Kuwait's New Emir". BOL News. 29 September 2020. Archived from the original on 4 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "New Emir of Kuwait named". Royal Central (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 29 September 2020. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.