நவாப் மாலிக்

நவாப் மாலிக் ஆங்கிலம்Nawab Malik(பிறப்பு 20 ஜூன் 1959) இந்திய அரசியல்வாதி, தேசியவாத காங்கிரசு கட்சி அரசியல்வாதி ஆவார்.மகாராஷ்டிராவின் சிறுபான்மையினர் வளர்ச்சி, வக்ப் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சராக பதவி வகிக்து வருகிறார். கோண்டியா நகரின் பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுகின்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் மும்பை தலைவராகவும், மகாராஷ்டிராவின் முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் ஆவார்.[1][2]

நவாப் மாலிக்
தொகுதி அனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)
தனிநபர் தகவல்
பிறப்பு 1959
துஸ்வா (உத்திரப்பிரதேசம்)
அரசியல் கட்சி தேசியவாத காங்கிரசு கட்சி
இருப்பிடம் மும்பை
இணையம் www.nawabmalik.in

பிறப்புதொகு

நவாப் மாலிக் 20 ஜூன் 1959 இல் துஸ்வாவில் (உத்திரப்பிரதேசம்) பிறந்தவர், 1970 ஆண்டு பம்பாய்க்கு (தற்போதைய மும்பைக்கு) குடிபெயர்ந்தவர்.

கல்விதொகு

அஞ்சுமன் இஸ்லாம் உயர்நிலைப் பள்ளி - எஸ்எஸ்சி (1976) புர்ஹானி கல்லூரி - இன்டர் (1978) எஃப்.ஒய். (பி.ஏ.) புர்ஹானி கல்லூரி (1979)

குடும்பம்தொகு

நவாப் மாலிக்கிற்க்கு மெஹாஜபின் எனும் மனைவியும், ஃபராஸ், அமீர் என்ற மகன்களும், நிலோஃபர், சனா மாலிக் ஷேக் என்ற மகள்களும் உள்ளனர்

சட்டமன்றத்தில்தொகு

மாலிக், 1996, 1999, 2004-ல் நேரு நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 2009,2019-ல் மும்பையில் உள்ள அனுசக்தி நகர் (விதான் சபா தொகுதி) ஆகியவற்றிலிருந்து மகாராட்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "NCP Leader Nawab Malik Targets Anna Hazare, Gets Sued For Defamation". NDTV.com.
  2. "Nawab Malik is second NCP minister to quit". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 March 2005. https://timesofindia.indiatimes.com/city/mumbai/Nawab-Malik-is-second-NCP-minister-to-quit/articleshow/1049486.cms. 
  3. "அனுசக்தி நகர்சட்டசபைத் தேர்தல் முடிவு (2009)". Chief Electoral Officer, Maharashtra website. 9 ஏப்ரல் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாப்_மாலிக்&oldid=3560246" இருந்து மீள்விக்கப்பட்டது