நவீன் ராசா யாக்கோபு

இந்தியக் கைப்பந்து வீரர்

மணிதுரை நவீன் ராசா யாக்கோபு (Manidurai Naveen Raja Jacob) தற்போதைய இந்திய தேசிய ஆண்கள் கைப்பந்தாட்ட அணியின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் நாள் பிறந்தார்[1].

தொடக்க்கால வாழ்க்கை

தொகு

தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடிக்கு அருகிலுள்ள சுண்டங்கோட்டை கிராமத்தில் யாக்கோபு பிறந்தார். கைப்பந்து விளையாட்டில் இவருக்கு இருந்த திறமையை அவருடைய சகோதரர் கவனித்தறிந்தார். 2003 ஆம் ஆண்டில் யாக்கோபு கைபந்து விளையாட்த் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டில் தேசிய சாம்பியன் பட்டத்தை விசயவாடா அணி கைப்பற்றியபோது இவர் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார். தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கைப்பந்தாட்ட விளையாட்டு வீர்ர் என்பதால் 2007 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீசு வங்கி யாக்கப்பிற்கு வங்கியில் ஒரு பணியை கொடுத்து சிறப்பித்தது [2].

தொழிலும் வாழ்க்கையும்

தொகு

இந்திய தேசிய ஆண்கள் கைப்பந்தாட்ட அணியின் ஓர் உறுப்பினர் என்ற பெருமையுடன் இவர் 18 என்ற எண்ணிடப்பட்ட மேலாடையை அணிந்து விளையாடுவார். பந்தை எதிர்திசையில் அடித்து முடிப்பதற்கு ஏதுவாக பந்தை தூக்கி நிறுத்துபவர் என்ற நிலையில் இவர் விளையாடுபவர் [3]. யாக்கோபு தமிழ்நாடு மாநில கைப்பந்து அணியின் தலைவராகவும் விளையாடினார் [4].

மேற்கோள்கள்

தொகு
  1. "when-naveen-paid-price-bunking-class". Chennai, India: deccanchronicle. 2013-12-09. http://www.deccanchronicle.com/131209/sports-other-sports/article/when-naveen-paid-price-bunking-class. பார்த்த நாள்: 2014-10-01. 
  2. "I didn’t feel any pressure: Naveen". Chennai, India: indianexpress. 2014-10-06. http://archive.indianexpress.com/news/i-didn-t-feel-any-pressure-naveen/498123/. பார்த்த நாள்: 2012-08-05. 
  3. "Biographies". Chennai, India: incheon2014ag. 2014-10-06 இம் மூலத்தில் இருந்து 2014-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141007010934/https://www.incheon2014ag.org/Sports/Biographies/Athletes_Profile/?ParticCode=5122702&lang=en. பார்த்த நாள்: 2014-10-06. 
  4. "Tamil Nadu enters semifinals". Chennai, India: thehindu. 2012-01-10. http://www.thehindu.com/todays-paper/tp-sports/tamil-nadu-enters-semifinals/article2788865.ece. பார்த்த நாள்: 2012-01-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன்_ராசா_யாக்கோபு&oldid=3299937" இலிருந்து மீள்விக்கப்பட்டது