நவ்கான் கிணறு

குசராத்தின் சூனாகத்தில் அமைந்துள்ள ஓர் படிக்கட்டுக் கிணறு

நவ்கான் கிணறு (Navghan Kuvo) அல்லது நவ்கான் குவோ என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள சூனாகத்தில் அமைந்துள்ள உபர்கோட் கோட்டையில் அமைந்துள்ள ஓர் படிக்கட்டுக் கிணறு ஆகும். [1]

நவ்கான் கிணறு
படிக்கட்டுக் கிணற்றின் முன்பகுதிக்கு செல்லும் படிகளின் வரிசை
Map
பொதுவான தகவல்கள்
வகைபவோலி
கட்டிடக்கலை பாணிஇந்தியக் கட்டிடக்கலை
இடம்உபர்கோட் கோட்டை
நகரம்ஜூனாகத்
நாடுஇந்தியா
ஆள்கூற்று21°31′26″N 70°28′09″E / 21.5238°N 70.4692°E / 21.5238; 70.4692
கட்டுமான ஆரம்பம்2ஆம்-7ஆம் நூற்றாண்டு
நிறைவுற்றது11ஆம்-12ஆம் நூற்றாண்டு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)உள்ளூர் பாணி
பதவிகள்இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

வரலாறு

தொகு

நவ்கான் குவோ சுடாசமா மன்னன் இரா நவகானாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. கிணற்றை அடைவதற்கான முன்தளம் 11ஆம் நூற்றாண்டில் அவனது ஆட்சியின் போது கட்டப்பட்டிருக்கலாம். இது அவனது மகன் கெங்கரனால் முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கிணறு முன்புறத்தை விட பழமையானதாக கருதப்படுகிறது. சில அறிஞர்களின் கூற்றுப்படி , படிக்கட்டுக் கிணற்றின் பழமையான உதாரணம் இது. இது உபர்கோட் குகைகளுக்கு அருகில் உள்ளது. கிணறு மேற்கு சத்ரபதிகள் காலத்தில் (2-4 ஆம் நூற்றாண்டு) அல்லது மைத்திரகர்கள் காலத்தில் (6-7 ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டிருக்கலாம். [2]

இது குசராத்து மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.

கட்டிடக்கலை

தொகு

சிறிய படிக்கட்டு ஒன்று வளைவான கதவு வழியாக நுழைகிறது. கிணறு முன்மண்டபத்தின் கடைசியில் அமைந்துள்ளது. கிணற்றின் தண்டு மெல்லிய கல் சுவருக்குப் பின்னால் உள்ள மென்மையான பாறையில் வெட்டப்பட்ட வட்டமான படிக்கட்டு மூலம் கிணற்றில் உள்ள தண்ணீரை அடைகிறது. படிகளின் அமைப்பு, முதலில் நேராகவும் பின்னர் குறுக்காகவும், தண்டைச் சுற்றி வலதுபுறமாகத் திரும்புகிறது. தண்டின் கல் சுவரில் உள்ள சதுர துளைகளின் வரிசை உள்ளே ஒளிருகிறது. மேலும் குளிர்ச்சியடைகிறது..[3][4][5]

புகைப்படங்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Jutta Jain-Neubauer (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. pp. 22, 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-02284-3.
  2. Jutta Jain-Neubauer (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. pp. 22, 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-02284-3.Jutta Jain-Neubauer (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. pp. 22, 27. ISBN 978-0-391-02284-3.
  3. Jutta Jain-Neubauer (1981). The Stepwells of Gujarat: In Art-historical Perspective. Abhinav Publications. pp. 22, 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-02284-3.
  4. Anjali H. Desai (2007). India Guide Gujarat. India Guide Publications. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9789517-0-2.
  5. Morna Livingston; Milo Beach (April 2002). Steps to Water: The Ancient Stepwells of India. Princeton Architectural Press. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56898-324-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்கான்_கிணறு&oldid=3328620" இலிருந்து மீள்விக்கப்பட்டது