நவ்ஜோத் கவுர் சித்து
நவ்ஜோத் கவுர் சித்து(Navjot Kaur Sidhu) ஓர் இந்திய அரசியல்வாதியும் பஞ்சாப் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக அமிர்தசரசு கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2012ஆம் ஆண்டில் இவர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைமை நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1]
நவ்ஜோத் கவுர் சித்து | |
---|---|
பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012 – 8 அக்டோபர் 2016 | |
முன்னையவர் | கியான் சந்த் கர்பந்தா |
பின்னவர் | நவ்ஜோத் சிங் சித்து |
தொகுதி | அமிர்தசரசு கிழக்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ்(2016–தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (2016 வரை) |
துணைவர் | நவ்ஜோத் சிங் சித்து |
குடும்பம்
தொகுஇவர் தொழிலில் மருத்துவராக உள்ளார். மேலும், பாட்டியாலா அரசு ராஜீந்திர மருத்துவமனையில் பணியாற்றினார். பின்னர் 2012 ஜனவரியில் பதவியிலிருந்து விலகி அரசியலில் சேர்ந்தார்.[2] இவர் முன்னாள் துட்டுப்பாட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து என்பவரை மணந்தார்.[3] இவர்களுக்கு கரண் என்ற மகனும் மகள் ரபியாவும் உள்ளனர்.[4]
அரசியல்
தொகுமுதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மீது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன், கவுர் தனது முகநூல் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இவரது கணவரும், துடுப்பாட்ட வீரரும் பின்னர், அரசியல்வாதியாக மாறிய நவ்ஜோத் சிங் சித்து, பாரதிய ஜனதா கட்சியின் பஞ்சாப் பிரிவிலும், சிரோமணி அகாலிதளத்தின் தலைமையுடனும் சிறந்த உறவுகளை கொண்டிருக்கவில்லை. 1 ஏப்ரல் 2016 அன்று ஒரு செய்தியை வெளியிட்டார். அச்செய்தியில், "இறுதியாக நான் பாஜகவை விட்டு வெளியேறுகிறேன். எனது சுமை முடிந்துவிட்டது" என்று கூறினார்.[5]
மொகாலியில் ஒரு தனியார் மருத்துவமனையை நடத்தி வரும் ஒரு மூத்த மாநில அரசு மருத்துவ அதிகாரியை நவ்ஜோத் கவுர் ஒரு இரகசிய நடவடிக்கை மூலம் அம்பலப்படுத்தினார்.[6] அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இவரை சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்களுக்கான பாலினத்தை அறிவதை தடுக்கும் தேசியக் குழுவில் உறுப்பினராக்க அழைத்தார்.[7]
குறிப்புகள்
தொகு- ↑ "The Tribune, Chandigarh, India - Jalandhar Edition". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.
- ↑ "Archived copy". Archived from the original on 29 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Navjot Kaur Sidhu | Region in pics | Photos Punjab". Hindustan Times. Archived from the original on 14 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2012.
- ↑ "Interview Navjot & Navjot". Hindustan Times. 13 January 2012. Archived from the original on 3 December 2013. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ "'The burden is over': Navjot Singh Sidhu's wife quits BJP on Facebook". 1 April 2016. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.
- ↑ "Sidhu's wife pitted against another greenhorn in Amritsar (E)". Indian Express. 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2012-10-18.
- ↑ "The Tribune, Chandigarh, India - Jalandhar Edition". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 20 October 2018.