நவ்தீப் சிங் (தடகள வீரர்)

இந்திய இணை ஒலிம்பிக் வீரர்

நவ்தீப் சிங் (Navdeep Singh (athlete)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இணை தடகள விளையாட்டு வீரர் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் ஆவார். 2024 பாரிஸ் இணை ஒலிம்பிக்கு போட்டியில் ஈட்டி எறிதல் எஃப்41 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[1] 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கு போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் எப்41 பிரிவில் இவர் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[2][3]

நவ்தீப் சிங்
Navdeep Singh
தனிநபர் தகவல்
பிறப்பு11 நவம்பர் 2000 (2000-11-11) (அகவை 24)
பானிப்பத், இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஇணை-தடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுடி41 வகை
பயிற்றுவித்ததுவிபின் கசானா
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2020 டோக்கியோ
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
ஆசிய இளையோர் இணை விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 துபாய் ஆண்கள் ஈட்டி எறிதல்
2021, உலக இணை தடகளம் கிராண்டு பிரிக்சு
தங்கப் பதக்கம் – முதலிடம் 2021, துபாய் ஆண்கள் ஈட்டி எறிதல் - எப்41

தனிப்பட்ட வாழ்கை

தொகு

நவ்தீப் சிங், இந்தியாவின் அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்தவர்.[4] இவரது தந்தை ஒரு விவசாயி மற்றும் நகரத்தில் பால் பால் பண்ணை நடத்தி வந்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

தொழில்

தொகு

2017 ஆம் ஆண்டில், துபாயில் நடந்த ஆசிய இளைஞர் இணை விளையாட்டுகளில் ஆண்கள் ஈட்டி எறிதல் எப் 41 பிரிவில் நவ்தீப் இந்தியாவுக்காக தங்கம் வென்றார்.[5] பின்னர் துபாயில் நடைபெற்ற உலக இணை தடகள கிராண்ட் பிரிக்சு 2021 போடியில் தங்கப் பதக்கம் வென்றார்.[6][7]

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று, நடைபெற்ற 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் எப்41 பிரிவில் நவ்தீப் நான்காவது இடத்தைப் பிடித்தார்.[8][9] 2024 பாரிஸ் இணை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார்.[10] வருமான வரித்துறையில் ஆய்வாளராக பணிபுரிகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sportstar, Team (2024-09-07). "Paris 2024 Paralympics: Navdeep's silver medal upgraded after gold medallist Sadegh Beit Sayah of Iran gets disqualified". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-07.
  2. "Tokyo Paralympics: Javelin thrower Navdeep finishes fourth in F41 event". sportstar.thehindu.com (in ஆங்கிலம்). 2021-09-04. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  3. "Tokyo Paralympics: Javelin thrower Navdeep finishes fourth in F41 event | Tokyo Paralympics News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). September 4, 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  4. "Navdeep Singh: Once ridiculed for height, income tax inspector wins India's seventh gold at Paralympics 2024". Firstpost. 8 September 2024 இம் மூலத்தில் இருந்து 8 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240908075337/https://www.firstpost.com/sports/paralympics-2024-navdeep-singh-disability-story-sadegh-beit-sayah-13812985.html. 
  5. "World Para Athletics: Navdeep, Arvind win 2 quotas, India win 4 gold". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  6. "Navdeep, Arvind win gold to secure quotas for Tokyo Paralympic Games". The Indian Express (in ஆங்கிலம்). 2021-02-13. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  7. "World Para Athletics: Navdeep, Arvind win 2 quotas, India win 4 gold". MorungExpress. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  8. "Tokyo Paralympics: Javelin thrower Navdeep finishes fourth in F41 event". www.business-standard.com (in ஆங்கிலம்). 2021-09-04. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  9. "Tokyo Paralympics: Javelin thrower Navdeep finishes fourth in F41 event". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
  10. "Once taunted for his height, javelin thrower Navdeep Singh wins India's seventh gold". The Indian Express (in ஆங்கிலம்). 2024-09-08. பார்க்கப்பட்ட நாள் 2024-09-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்தீப்_சிங்_(தடகள_வீரர்)&oldid=4125527" இலிருந்து மீள்விக்கப்பட்டது