நவ்யா அரிதாசு
நவ்யா அரிதாசு (Navya Haridas) கேரள மாநிலத்தை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டுமுறை கோழிக்கோடு மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி 2024 இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சா தலைவர் நவ்யா அரிதாசை பாரதியா ஜனதா கட்சி தேர்வு செய்தது. இவர் காங்கிரசின் தேசியத் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) கட்சியின் சத்யன் மொகேரி ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.[2]
நவ்யா அரிதாசு | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1985 |
தேசியம் | இந்தியா |
துணைவர் | சோபின் சியாம்[1] |
பிள்ளைகள் | சாத்விக் சோபின் இசானா சோபின்[1] |
பெற்றோர் | டி. அரிதாசன் (தந்தை) டி. எம். சகுந்தலா (தாயார்) [1] |
இளமையும் கல்வியும்
தொகுநவ்யாவின் தந்தை டி. அரிதாசன், தாயார் டி. எம்.. சகுந்தலா ஆவார். இவரது கணவர் சோபின் சியாம். இவர்களுக்கு சாத்விக் சோபின் மற்றும் இசானா சோபின் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1] நவ்யா இயந்திரப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் இளையர் பட்டம் பெற்றவர் ஆவார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Who is Navya Haridas? Young BJP leader facing Priyanka Gandhi in Wayanad". mathrubhumi. 2024-10-20. பார்க்கப்பட்ட நாள் 2024-10-21.
- ↑ Bureau, The Hindu (2024-10-20). "Wayanad bypoll: Who is Navya Haridas — BJP's candidate against Priyanka Gandhi Vadra". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2024-10-21.
- ↑ News Desk, HT (2024-10-19). "Who is Navya Haridas, Priyanka Gandhi's BJP challenger in Wayanad bypoll?". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2024-10-21.