நவ்ரோஜி சக்லத்வாலா

இந்திய தொழிலதிபர்

சர் நவ்ரோஜி சக்லத்வாலா (Sir Nowroji Saklatwala, (1875–1938) என்பவர் டாட்டா குழுமத்தின் மூன்றாவது தலைவராக இருந்தவர். 1932 இல் இக்குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்ற இவர் 1938 இல் மாரடைப்பு காரணமாக திடீரென இறக்கும்வரை இருந்தவர்.[1]

சர் நவ்ரோஜி சக்லத்வாலா
Sir Nowroji Saklatwala
Nowroji Saklatwala Grave Brookwood.jpg
புரூக்வுட் கல்லறைத் தோட்டத்தில், நவ்ரோஜி சக்லத்வாலாவின் கல்லறை
பிறப்பு1875
பிரித்தானிய இந்தியா, பம்பாய்
இறப்பு1938 (aged 63)
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பணிFormer chairman of Tata Group
பெற்றோர்பாபுஜி மற்றும் விர்பாஜி
உறவினர்கள்ஜம்சேத்ஜீ டாட்டா (தாய்மாமன்)

இவர் பாபுஜி சக்ளத்வாலா மற்றும் விர்பாஜி சக்ளாத்வாலா இணையரின் மகனாவார். இவரது தாயாரான விர்பாஜி சக்ளாத்வாலா ஜம்சேத்ஜீ டாட்டாவின் சகோதரி ஆவார்.[2] செயின்ட் சேவியர் கல்லூரியில் படிப்பை நிறைவு செய்த இவர், மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் ஸ்வாஷிஷி ஆலையில் 1899 இல் ஒரு எழுத்தராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு இருபது ஆண்டுகளில், நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார். டாட்டா குழுமத்தின் தலைமைக்கு வந்த முதல் டாட்டா அல்லாதவர் இவர்தான்.[3] மேலும் தோரப்ஜி டாடாவுடன் நெருக்கமாக பணியாற்றினார். 1932 ஆம் ஆண்டில் தோரப்ஜி இறந்த போது, அவர் டாட்டா குழுமத்தின் தலைவராக ஆனார், பொருளாதார நெருக்கடியின் போது நிறுவனத்தை ஒருங்கிணைப்பதற்கான பணியில் ஈடுபட்டார்.[4]

டாடா நிறுவனத்தில் தொழிலாளர்களால் மிகுதியாக அதிகமாக நேசிக்கப்பட்டவர் என்ற பெயர் பெற்றவர் இவர். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தால், நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சுமுக நிலையை உருவாக்குவது, வருவாயில் தொழிலாளர்களுக்கும் பங்கு அளிப்பது, கடைநிலை ஊழியர்களும் கௌரவமான வாழ்க்கை வாழ ஏதுவாக நிறுவனத்துக்குள் இருந்த ஊதிய வேறுபாட்டைக் களைவது போன்ற தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் அக்கறை காட்டியதற்காக இவர் அறியப்படுகிறார்.[5]

இந்திய துடுப்பாட்டத்துடன் இவர் நெருக்கமாக இணைந்திருந்தார். பார்சஸ் அணிக்காக 1904-05இல் இவர் விளையாடினார், ஆனால் தொழில் காரணமாக தீவிரமாக விளையாடுவதை முன்கூட்டியே நிறுத்தினார். துடுப்பாட்ட வீரராக இவர் 1904 ஆம் ஆண்டில் ஐரோப்பர்களுக்கு எதிரான குழுவின் பார்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[6]

1933 ஆம் ஆண்டு இவர் மரணமடையும் வரை இந்தியாவின் துடுப்பாட்டக் கழகத்தின் முதல் தலைவராக இருந்தார். மேலும் இவர் பிரபூர்ன் விளையாட்டு அரங்கின் வளர்ச்சிக்கு ஒரு கருவியாக இருந்தார், அதற்காக அவர் ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அளித்தார்.

சக்லத்வாலா 1923 ஆம் ஆண்டு புத்தாண்டு விருது பட்டியலில், இந்தியப் பேரரசின் தோழராக இடம்பிடித்தார்,[7] 1933 ஆம் ஆண்டு பிறந்தநாள் விருதின்போது நைட் விருதைப் பெற்றார் பெற்றார்[8] மேலும் 1937 ஆண்டு கரோனேசன் கௌரவப் பட்டியலில் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஒரு நைட் கமாண்டர் எனக் கருதப்பட்டார்.[9] இவர் இறந்தபிறகு புரூக்வுட் கல்லறையில் உள்ள பார்சி பிரிவில் புதைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்தொகு

  1. "The Enigma called Pallonji Mistry". பார்த்த நாள் 2008-03-09.
  2. Tata Family tree பரணிடப்பட்டது 5 பெப்ரவரி 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. "The Tata Titans". The Hindu. http://www.thehindubusinessline.com/features/the-tata-titans/article4245782.ece. பார்த்த நாள்: 15 December 2014. 
  4. [1]
  5. வ.ரங்காசாரி (2018 அக்டோபர் 18). "ஐந்து டாடாக்களும் ஒன்றரை நூற்றாண்டு வெற்றி வரலாறும்!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 23 அக்டோபர் 2018.
  6. "cricinfo.com". பார்த்த நாள் 2008-03-09.
  7. London Gazette, 1 January 1923
  8. London Gazette, 3 June 1933
  9. London Gazette, 11 May 1937
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்ரோஜி_சக்லத்வாலா&oldid=2590892" இருந்து மீள்விக்கப்பட்டது