நாகப்பட்டினம் துறைமுகம்

நாகப்பட்டினம் துறைமுகம் (Nagapattinam Port) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் நகரத்திலுள்ள ஒரு சிறு துறைமுகம் ஆகும். நாகப்பட்னம் அல்லது நாகப்பட்டம் துறைமுகம் என்ற பெயர்களாலும் இத்துறைமுகம் அழைக்கப்படுகிறது. வங்காள விரிகுடா கடற்கரையில் ஓர் இயற்கை துறைமாக இது அமைந்துள்ளது. இடைக்கால சோழர்களின் காலத்தில் இந்த துறைமுகம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வர்த்தகம் மற்றும் கிழக்கு நோக்கி கடற்படை பயணங்களுக்கு அவர்களின் முக்கியமான துறைமுகமாக செயல்பட்டது. நாகப்பட்டினம் மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இத்துறைமுகம் போர்த்துகேயர்களின் முதன்மை துறைமுகமாக விளங்கியது. 1660 ஆம் ஆண்டில் டச்சுக் காரர்கள் இதனைக் கைப்பற்றினர். 1781 வரை அவர்கள் வசமே நாகப்பட்டினம் துறைமுகம் இருந்து வந்தது. இங்கு பயணியர் கப்பல்களும் சரக்குக் கப்பல்களும் வந்து போயின. நாகூரைச் சேர்ந்த இசுலாமிய வணிகர்கள் கடல் வணிகத்தில் பெரிதும் பங்கேற்றனர். 1781 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் துறைமுகத்தைக் கைப்பற்றியது. கோரமண்டல் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம் முதன்மையான துறைமுகமாக மாறும்வரை காலனி நாடுகளின் அரசுகளுக்கு நாகப்பட்டினம் துறைமுகம் ஒரு முக்கியத் துறைமாக இருந்துவந்தது.

வரலாறு

தொகு
 
நாகப்பட்டினம் துறைனுகத்திலுள்ள படகுகளில் ஓவியங்கள்

இடைக்கால சோழர்கள் காலத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் போர்த்துக்கீசியர்களால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் வர்த்தகம் மேற்கொள்ளவும் கிழக்கு நோக்கிய கடற் பயணங்களுக்கும் முக்கிய துறைமுகமாக பயன்படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துகீசியர்கள் துறைமுகத்தின் மூலம் நாகப்பட்டினம் நகரத்துடன் வணிக தொடர்புகளைத் தொடங்கினர். 1554 இல் அங்கு ஒரு வணிக மையத்தையும் நிறுவினர். மேலும் போர்த்துகீசியர்கள் இந்நகரத்தில் மதபோதனை நிறுவனத்தையும் நடத்தினர் [1].

1658 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் தஞ்சாவூர் மன்னர் விசயநாயக்கரிடம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். சனவரி 5, 1662 ஆம் ஆண்டில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி நாகப்பட்டினம் துறைமுகம், புத்தூர், முட்டம், பொருவலாஞ்சேரி, அந்தானப்பேட்டை, கருரேப்பங்காடு, அழிங்கிமங்கலம், சங்கமிரங்கங்கலம், சங்கமதிங்கலம் , நரியங்குடி ஆகிய பத்து கிராமங்கள் போர்த்துகீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்கள்வசம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூரின் முதலாவது மராட்டிய மன்னர் ஈகோசி மற்றும் டச்சுக்காரர்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, நாகப்பட்டினமும் அதைச்சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் 1676 டிசம்பர் 30 அன்று டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 1690 ஆம் ஆண்டு டச்சு கோரமண்டலின் தலைநகரம் புலிக்காட்டில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது [1].

1781 ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் மற்றும் பிரெஞ்சு கடற்படைகளுக்கு இடையிலான இரண்டு கடற்படைப் போர்கள் நாகப்பட்டினம் கடற்கரையில் நிகழ்ந்த பின்னர் இந்த நகரம் ஆங்கிலேயர்களின் கைகளில் விழுந்தது. நாகப்பட்டினம் போர் என்று அது அறியப்படுகிறது. முதலில் 1758 ஆம் ஆண்டில் தொடங்கிய ஏழு வருடப் போரின் ஒரு பகுதியாகவும், இரண்டாவது 1782 இல் அமெரிக்க புரட்சிகரப் போரின் ஒரு பகுதியாகவும் இப்போர் கருதப்படுகிறது. 1781 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்களால் இந்த நகரம் கைப்பற்றப்பட்டது. 1780 இல் டச்சுக்கார்ர்கள் முறையாக போருக்குள் வந்திருந்தனர்[2].1784 இல் டச்சு மற்றும் பிரித்தானியர் சமாதான உடன்பாட்டை எட்டியபோது நாகப்பட்டினம் முறையாக ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாகூரைத் தலைமையகமாக கொண்ட 277 கிராமங்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டன.

1799 முதல் 1845 வரை நாகப்பட்டினம் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைமையிடமாக ஆக்கப்பட்டிருந்தது[3]. இந்த நகரம் மெட்ராசு மாகாணத்தின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருந்தது. தரங்கம்பாடி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் சேர்க்கப்பட்ட பின்னர் துறைமுகம் சரிவை சந்தித்தது. 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைமுகங்களில் இந்த துறைமுகமும் ஒன்றாகும் [4][5][6][7].

அமைவிடம்

தொகு

நாகப்பட்டினம் துறைமுகம் குதுவாயர் ஆற்றின் வாயில் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது[8].

வர்த்தகம்

தொகு

நாகப்பட்டினம் சோழப் பேரரசின் மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. ராசேந்திர சோழனின் அனைத்து கிழக்கு கடற்படை பயணங்களும் துறைமுகத்தின் வழியாகவே நிகழ்ந்துள்ளன. இந்த துறைமுகத்தை டச்சுக்கார்ர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் பிரித்தானியர்கள் போன்ற அயல்நாட்டினர்கள் கோரமண்டல் கடற்கரையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக கருதி வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர் [8] பிரித்தானியர்கள் காலத்தில் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பிரதான ஏற்றுமதியாக பெரும்பாலும் அரிசி, சுருட்டு, புகையிலை மற்றும் தோல் போன்றவை அனுப்பப்பட்டன. நாகப்பட்டினத்தின் வர்த்தகம் பெரும்பாலும் இலங்கை, நீரிணை குடியேற்றங்கள், பர்மா மற்றும் ஐக்கிய இராச்சியம் மற்றும் எசுப்பானியாவுடன் நடைபெற்றது [9]. இந்த துறைமுகம் சிங்கப்பூருக்கு பயணிகள் போக்குவரத்தையும் வழங்கியது, ஆனால் ஒரு தீ விபத்து காரணமாக அது கைவிடப்பட்டது {sfn|The Hindu Business Line|20 January 2012}}. இன்றைய நவீன துறைமுகத்தில் வணிக துறைமுக வளாகம் மற்றும் கப்பல்துறை போன்ற வசதிகள் உள்ளன. அவை சிறந்த முறையில் பாதுகாக்கப் பட்டு பராமரிக்கப்படுகின்றன [10]. குறைந்த அளவு சமையல் எண்ணெய் இறக்குமதியை மட்டுமே துறைமுகம் கையாளுகிறது [11]. நாகாப்டினம் கலங்கரை விளக்கம் 1869 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் துறைமுக வளாகத்திற்குள் கட்டப்பட்டது. இதுவே முதல் வழக்கமான 20 மீட்டர் உயர (66 அடி) கலங்கரை விளக்கம் கோபுரம் ஆகும் 20-மீட்டர்-high (66 அடி). துறைமுகமும் கலங்கரை விளக்கமும் இந்திய அரசின் கீழ் தமிழ்நாடு கடல் வாரியத்தால் பராமரிக்கப்படுகின்றன {{sfn|Nagapattinam Port|2011}.

துறைமுக மேம்பாடு

தொகு

நாகப்பட்டினம் துறைமுகத்தை பொது - தனியார் கூட்டாண்மை அடிப்படையில், 380 கோடி ரூபாய் செலவில், அனைத்து பருவ கால நிலைக்கேற்ப, ஆழ்கடல் கப்பலணை மற்றும் பசுமைச் சூழலுடன் கூடிய துறைமுகமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த துறைமுக மேம்பாட்டினால், இதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான, துறைமுக இணைப்பு வசதி கிடைக்கும். தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள இப்பகுதியில், வேலைவாய்ப்பு வசதியும், பொருளாதார வசதியும் ஏற்படும்.[12].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Francis 2002, ப. 139.
  2. Francis 2002, ப. 136.
  3. Francis 2002, ப. 161.
  4. About the town 2011.
  5. Nagapattinam Municipality features 2011.
  6. Nagapattinam district profile 2011.
  7. Nagapattinam district local administration 2011.
  8. 8.0 8.1 Nagapattinam Port 2011.
  9. Francis 2002, ப. 144.
  10. Strand & Masek 2008, ப. 235–239.
  11. The Hindu Business Line 20 January 2012.
  12. "நாகப்பட்டினம் துறைமுகம் ரூ.380 கோடியில் மேம்பாடு". 21 சனவரி 2012. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 06 அக்டோபர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

.

வெளி இணைப்புகள்

தொகு