நாகம்மாவா? (நூல்)

நாகம்மாவா? என்னும் நூல் நீல. பத்மநாபன் 1974ஆம் ஆண்டிற்கும் 1976ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். இவற்றுள் 10 கதைகளை செய்தித் தொகுப்பு நடப்பியல் முறையில் எழுதப்பட்டவை என்றும் 5 கதைகளை விமரிசன நடப்பியல் முறையில் எழுதப்பட்டவை என்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சி. கனகசபாபதி பகுக்கிறார். [1]

நாகம்மாவா?
நூல் பெயர்:நாகம்மாவா?
ஆசிரியர்(கள்):நீல. பத்மநாபன்
வகை:இலக்கியம்
துறை:கதைகள்
இடம்:மதுரை
மொழி:தமிழ்
பக்கங்கள்:vi +124
பதிப்பகர்:முத்துப் பதிப்பகம்
மாதவி
ஆழ்வார் நகர்
மதுரை 625 019
பதிப்பு:முதற் பதிப்பு: நவம்பர் 1978 இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1980
ஆக்க அனுமதி:நீல. பத்மநாபன்

பொருளடக்கம்தொகு

இந்நூலில் உள்ள கவிதைகளும் அவை வெளிவந்த இதழ்களும் வருமாறு:

வ.எண் கதைத் தலைப்பு எழுதப்பட்ட நாள் வெளிவந்த இதழ் வெளிவந்த நாள் பேசு பொருள்
01 குழந்தையும் தெய்வமும் சதங்கை தீபாவளி மலர் 1974 உடன்பிறந்தானின் மனைவியுடன் உறவுகொள்ளும் சமுதாய வழக்கம்.
02 சமூக ஜீவி சதங்கை ஏப்ரல் 1975 சமுதாய உயிராக வாழாமல் ஏமாற்றும் போலியாக வாழும் மனித நிலைமை.
03 அபஸ்வரங்கள் சுதேசமித்திரன் 8-8- 1974 மூளைக்கோளாறு கொண்ட கணவன், மனைவியைத் துன்புறுத்துதல்.
04 மாத்திரை 17-2-1975 குமுதம் 20-3-1975 மருந்துக் கடையில் மாத்திரையை மாற்றிக் கொடுப்பதால் – டாக்டரின் புரியாத கையெழுத்தால் – நோயாளியின் உயிருக்குத் தீங்கு நேர்கிறது.
05 இல் அறம் 3-3-1975 ஏடு ஏப்ரல் 1975 பணம் சேர்க்கும் பேராசையால் இல்லறம் அறமில்லாமல் போகிறது.
06 பதர் 26-3-1975 சதங்கை திசம்பர் 1975 நெல்லில் பதர் இருப்பதுபோல் மனிதர்களில் தாயை மதிக்காத பதரும் இருக்கிறான்.
07 வீடு திரும்புதல் 9-4-1975 குமுதம் 3-7-1975 திருமண வயது மிகுதியும் கடந்துவிட்டதால் வரும் மனப்பாதிப்பு.
08 மோகபங்கம் 6-7-1975 வஞ்சி நாடு ஆகத்து 1975 மணமுறிவும் பாலியல் தடுமாற்றமும் கொண்ட இளைஞனின் நிலையும் தந்தையின் மனப்பாதிப்பும்.
09 காவல் 6-7-1975 வஞ்சி நாடு ஆகத்து 1975 நாயைக் கண்டால் பயம்.
10 விருந்து 23-8-1975 தீபம் நவம்பர் 1975 பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்துகொண்ட நடுத்தர வர்க்க மனிதன் குறைத்து மதிக்கப்படுதல்.
11 தூண்டுதல்கள் 6-10-1975 குமுதம் 30-10-1975 பாலியல் தூண்டுதல்களின் மிகுதியால் முளைக்கோளாறு உண்டாதல்.
12 அந்நியன் 13-10-1975 பம்பாய்த் தமிழ்ச் சங்க நாடக விழாமலர் 1975 நண்பனாகப் பழகிய வீட்டில் அந்நியனாக விரட்டப்படுதல்.
13 போதை 13-11-1975 கணையாழி சூலை 1979 குடிபோதையின் விளைவுகள்.
14 தேடுகிறவர்கள் 29-3-1976 தீபம் ஏப்ரல் 1976 கூட்டமும் ஆரவாரமும் நிறைந்த இடத்திலும் தாம் ஏதோ ஒன்றைச் சிந்தனையோடு தேடல்.
15 நாகம்மாவா? 23-5-1976 குமுதம் 12-8-1976 நாகம் நினைத்தால் பழிவாங்கிவிடும் என்ற நம்பிக்கை.

சான்றடைவுதொகு

  1. கனகசபாபதி சி, ஆய்ந்துரை, நாகம்மாவா?, முத்துப் பதிப்பகம், மதுரை, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகம்மாவா%3F_(நூல்)&oldid=1810297" இருந்து மீள்விக்கப்பட்டது