நீல பத்மநாபன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
(நீல. பத்மநாபன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் (பிறப்பு: ஏப்ரல் 26, 1938),[1] தமிழ்நாட்டில் கன்னியாகுமரியினைச் சேர்ந்த ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.[2][3][4][5][6][7]. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.

பிறப்பு

தொகு

நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 1938 ஏப்ரல் 26 ஆம் நாள் நீலகண்டப்பிள்ளை - சானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]

கல்வி

தொகு

நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார்.[8] கேரளப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று அறிவியல் இளவர் பட்டம் பெற்றார்.[8] பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் அறிவியல் இளவர் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றார்.[1]

நீல பத்மநாபன் கல்லூரியில் பயிலும்பொழுதே, கேரள பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தார். எனவே கல்லூரிக் கல்வி முடிந்ததும் திருச்சூரில் அரசு அலுவலகம் ஒன்றில் சில காலம் பணியாற்றினார். தந்தை வற்புறுத்தலினால் அவ்வேலையைத் துறந்து பொறியியல் படிக்கச் சென்றார்.[8]

1963ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து 1993 ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார்.[1]

குடும்பம்

தொகு

நீல பத்மநாபன் கிருட்டிணம்மாள் என்பவரை மணந்து சானகி, உமா, நீலகண்டன், கவிதா என்னும் நான்கு மக்களை ஈன்றார்.[1]

படைப்புகள்

தொகு

"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்" என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.

புதினங்கள்

தொகு
வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் புதினம் பதிப்பகம் குறிப்பு
01 1968 தலைமுறைகள் 1. தலைமுறைகள் ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில்
02 1975 பள்ளிகொண்டபுரம் 2. பள்ளிகொண்டபுரம் வாசகர் வட்டம், சென்னை.
03 1973 பைல்கள் 3. பைல்கள் ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில்
04 1975 உறவுகள் 4. உறவுகள் ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில்
05 1976 மின் உலகம் 5. மின் உலகம்
06 1978 நேற்று வந்தவன் 6. நேற்று வந்தவன்
07 1980 உதய தாரகை 7. உதய தாரகை
08 1980 வட்டத்தின் வெளியே 8. வட்டத்தின் வெளியே
09 1981 பகவதி கோயில் தெரு 9. பகவதி கோயில் தெரு
10 1985 போதையில் கரைந்தவர்கள் 10. போதையில் கரைந்தவர்கள்
11. தீ தீ
12. முறிவுகள்
11 1987 தேரோடும் வீதி 13. தேரோடும் வீதி தன்வரலாற்றுப் புதினம்
12 1991 பாவம் செய்யாதவர்கள் 14. பாவம் செய்யாதவர்கள்
13 1994 வெள்ளம் 15. வெள்ளம்
14 1995 கூண்டினுள் பட்சிகள் 16. கூண்டினுள் பட்சிகள்
15 1997 யாத்திரை அனுபவங்கள் சமர் 17. யாத்திரை
18. அனுபவங்கள்
19. சமர்
முத்துப்பதிப்பகம், மதுரை
16 2005 இலை உதிர் காலம் 20. இலை உதிர் காலம் சாதிக்யா அகாதெமி விருது பெற்றது.

2004 ஆம் ஆண்டில் மேற்கண்ட அனைத்துப் புதினங்களும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் நாவல்கள் என்னும் தலைப்பில் வெளிவந்தது.

சிறுகதைகள்

தொகு
வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பதிப்பகம்
01 1969 மோகம் முப்பது ஆண்டு 11 சிறுகதைகள்
02 1972 சண்டையும் சமாதானமும் 11 சிறுகதைகள்
03 1974 மூன்றாவது நாள் 11 சிறுகதைகள்
04 1978 இரண்டாவது முகம் 19 சிறுகதைகள்
05 1978 நாகம்மாவா? 15 சிறுகதைகள் முத்துப்பதிப்பகம், மதுரை
06 1978 சிறகடிகள் 13 சிறுகதைகள்
07 1985 சத்தியத்தின் சந்நிதியில் 15 சிறுகதைகள்
08 1988 வான வீதியில் 18 சிறுகதைகள்
09 1998 அவரவர் அந்தரங்கம் 11 சிறுகதைகள்
10 2008 பிறவிப் பெருங்கடல்
11 2012 கொட்டாரம் என்னைப்போல் இருவர்
ரெளத்திரம்
நொண்டிப் புறா
பூஜை அறை
பகை
கொட்டாரம்
வானதி பதிப்பகம், சென்னை

2000 ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபன் கதைகள் என்னும் பெயரில் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது.

கவிதைகள்

தொகு
வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் இடம்பெற்றுள்ள கவிதைகள் பதிப்பகம்
01 1975 நீல பத்மநாபன் கவிதைகள் எழுத்து, சென்னை
02 1984 நா காக்க
03 1993 பெயரிலென்ன

2003ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் 148 கவிதைகள் என்னும் தலைப்பில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

கட்டுரைகள்

தொகு
வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பதிப்பகம்
01 1978 சிதறிய சிந்தனைகள் 17 கட்டுரைகள் அகரம், சிவகங்கை
02 1988 இலக்கியப் பார்வைகள் 13 கட்டுரைகள் அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
03 1991 சமூகச் சிந்தனை 18 கட்டுரைகள் அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
04 1993 யாரிடமும் பகையின்றி 21 கட்டுரைகள் அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
05 1997 வாழ்வும் இலக்கியமும் 14 கட்டுரைகள் அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
06 2001 நவீன இலக்கியம் - சில சிந்தனைகள் 18 கட்டுரைகள் அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
07 2003 இன்றைய இலக்கியச் செல்நெறிகள் 30 கட்டுரைகள் இராசராசன் பதிப்பகம், சென்னை 17
08 2006 ஐயப்ப பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும் விருட்சம், சென்னை
09 2008 உணர்வுகள் சிந்தனைகள் 137 கட்டுரைகள் நீயு செஞ்சுரி புக் அவுசு, சென்னை
10 2010 பார்வைகள் மறுபார்வைகள்

2005 ஆம் ஆண்டு வரை இவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் கட்டுரைகள் என்னும் தலைப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

நாடகத் தொகுதி

தொகு
 1. தனிமரம் 2009

திரட்டுநூல்

தொகு
 1. குரு சேத்திரம் - 1976

மொழிபெயர்த்துத் தொகுத்தவை

தொகு
 1. தற்கால மலையாள இலக்கியம் - 1985, நர்மதா பதிப்பகம், சென்னை.
 2. மதிலுகள் - நவீன மலையாள இலக்கியம் 2000, காவ்யா, சென்னை.
 3. ஐயப்பப் பணிக்கரின் கவிதைகள் - 1999
 4. ஐயப்பப் பணிக்கரின் கோத்ர யானம் 2002

மலையாள மொழிப் படைப்புகள்

தொகு

புதினங்கள்

தொகு
 1. பந்தங்கள் - 1979
 2. மின் உலகம் - 1980
 3. தலைமுறைகள் - 1981
 4. பள்ளிகொண்டபுரம் - 1982
 5. தீ தீ, 1990, டி.சி. புக்சு, கோட்டயம்

சிறுகதைகள்

தொகு
வரிசை எண் ஆண்டு நூலின் பெயர் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பதிப்பகம்
01 1980 கதைகள் இருபது இருபது கதைகள் கரண்ட் புக்சு, கோட்டயம்
02 1987 எறும்புகள் இருபது கதைகள் கரண்ட் புக்சு, கோட்டயம்
03 1997 அர்கண்ட் கோனில் இருபது கதைகள் கரண்ட் புக்சு, கோட்டயம்
04 2003 வேறத்தவர் 23 கதைகள் கரண்ட் புக்சு, கோட்டயம்

கவிதைகள்

தொகு
 1. நீல. பத்மநாபன்ட கவிதைகள், 2003, விசுவம் புக்சு, திருவனந்தபுரம்

கட்டுரைகள்

தொகு
 1. சிருட்டில நோப்புரங்கள், 2006, கரண்ட் புக்சு, கோட்டயம்

ஆங்கிலப் படைப்புகள்

தொகு

கட்டுரைகள்

தொகு
 1. PEARLS AND PEBBLES. 2004. 19 Essays, Reliance Publishing House, New Delhi-110008

கொய்தமலர்கள்

தொகு
 1. நீல பத்மநாபனின் எழுத்துலக விழுதுகள் 2002
 2. Neela Padmanaban - A Reader 2008
 3. நீல பத்மநாபம் 2010

நீல பத்மநாபனின் படைப்புகள் பற்றிய திறனாய்வுகள்

தொகு
 1. நீல பத்மநாபனின் இலக்கியத்தடம் 1999
 2. நீல பத்மநாபன் படைப்புலகம் 2001

விருதுகளும் பரிசுகளும்

தொகு
 1. உறவுகள் என்னும் புதினம் ராஜா அண்ணாமலைச் செட்டியார் பரிசினைப் பெற்றது.
 2. தமிழ் அன்னை விருது
 3. முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டு நீல பத்மநாபன் எழுதிய இலை உதிர் காலம் புதினம், 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் ரங்கம்மாள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 4. மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது
 5. தமிழ்நாடு அரசு விருது
 6. மைசூர் சிஐஐஆரின் பாஷா பாரதி பரிசு

குறிப்புகள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93
 2. Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் Sahitya Akademi Official website.
 3. "NEELA PADMANABHAN, A WRITER NON-PAREIL". Neela Padmanabhan. Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 June 2010.
 4. Indira Parthasarathy (8 December 2009). "Creative writing as a social act". The Hindu இம் மூலத்தில் இருந்து 6 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106051008/http://www.hindu.com/br/2009/12/08/stories/2009120853331300.htm. பார்த்த நாள்: 18 June 2010. 
 5. "Gauthaman to debut in Magizchi". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 18 June 2010.
 6. "Soul of Thiruvananthapuram". The Hindu. 2 March 2008 இம் மூலத்தில் இருந்து 7 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080307025910/http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm. பார்த்த நாள்: 18 June 2010. 
 7. "Creative modern writer". The Hindu. 26 March 2002 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107192345/http://www.hindu.com/thehindu/br/2002/03/26/stories/2002032600060300.htm. பார்த்த நாள்: 18 June 2010. 
 8. 8.0 8.1 8.2 "கல்லூரிநினைவுகள்: எழுத்தாளர நீலபத்மநாபன்". Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_பத்மநாபன்&oldid=3720198" இலிருந்து மீள்விக்கப்பட்டது