நாகராசன் வேதாச்சலம்
நாகராசன் வேதாச்சலம் (Nagarajan Vedachalam) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார்.[1] கே.ஆர்.ராமநாதன் விண்வெளித் துறையின் புகழ்பெற்ற பேராசிரியர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகழ்பெற்ற விஞ்ஞானி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.[2] இந்திய விண்வெளி திட்டத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டார்.[3] புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனத்திற்கான (ஜிஎஸ்எல்வி) தாழ்வெப்ப பொறி இயந்திரத்தை உருவாக்கிய நீர்ம உந்து திட்ட மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார். இசுரோவின் நூற்றுக்கும் மேற்பட்ட விண்வெளித் திட்டங்களுடன் தொடர்புடையவராக பணியாற்றியுள்ளார்.[2] இசுரோவின் ஓர் அலகின் [4] இயக்குநராக [2] உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றாலும், விண்வெளித் துறையின் பல குழுக்களில் இவர் தொடர்ந்து அமர்ந்து இருக்கிறார்.[5]
நாகராசன் வேதாச்சலம் Nagarajan Vedachalam | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | விண்வெளி விஞ்ஞானி |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
web site |
நாகராசன் வேதாச்சலத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அறிவியல் முனைவர் பட்டம் வழங்கி [3] கவுரவித்தது. இந்திய அரசும் 2003 ஆம் ஆண்டின் இறுதியில் நான்காவது உயர்ந்த இந்திய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[6]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Times of India". Times of India. 13 August 2012. பார்க்கப்பட்ட நாள் February 12, 2015.
- ↑ 2.0 2.1 2.2 "Coep". Coep. 2015. பார்க்கப்பட்ட நாள் February 12, 2015.
- ↑ 3.0 3.1 "The Hindu". The Hindu. 16 October 2009. பார்க்கப்பட்ட நாள் February 12, 2015.
- ↑ T. S. Subramanian (April 1999). "The men behind the mission". Frontline 16 (8). http://www.frontline.in/static/html/fl1608/16080080.htm.
- ↑ "Fresh Patents". Fresh Patents. 2015. Archived from the original on பிப்ரவரி 12, 2015. பார்க்கப்பட்ட நாள் February 12, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் February 6, 2015.