நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்

நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Nagalingam Ethirveerasingam, பிறப்பு: 1933) இலங்கைக் கல்விமானும், விளையாட்டு வீரரும் ஆவார். 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும்[1] மூன்று ஆசியப் போட்டிகளிலும்[1] இலங்கைக்காக விளையாடியவர்.

நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்
Nagalingam Ethirveerasingam (Ph.D.)
பிறப்பு1933
பெரியவிளான், யாழ்ப்பாணம் மாவட்டம், இலங்கை]]
இருப்பிடம்கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிவிரிவுரையாளர், விளையாட்டு வீரர்

இலங்கையின் முன்னணி உயரப்பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்தவர். அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958ல் ஜப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.[1]

எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்தவர். முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே அகில இலங்கை சாதனையை முறியடித்திருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரது உடன்பிறந்தவர்களான என். ராஜசிங்கம், என். பரராஜசிங்கம், என். செகராஜசிங்கம் ஆகியோரும் கல்லூரிக்காலத்தில் பரவலாக அறிந்த விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள்.

இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Ethir: Olympian and Bridge-Builder". SangamOrg. 2008-07-23. http://www.sangam.org/2008/07/Ethir.php?uid=3028. பார்த்த நாள்: 2009-01-07. 

வெளி இணைப்புகள் தொகு