நாகலோகம்
நாகலோகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் நாக இனங்கள் வாழ்கின்ற பாதளம் ஆகும். புராணங்களிலும், இதிகாசங்களிலும் இந்த உலகம் பற்றிய செய்திகள் உள்ளன. இந்த உலகத்தினை ஆட்சி செய்பவர் நாகதலைவன் என்றும், நாகராஜன் என்றும் அழைக்கின்றனர். ஆட்சியாளரின் மனைவி நாகராணி என்று அழைக்கப்படுகிறார்.[1]
மகாபாரதத்தில் அர்ஜூனன் நாகஇளவரசி உலுப்பி என்பவளை திருமணம் செய்து, அரவான் என்றொரு மகன் பிறந்தான். அரவான் மகாபாரப் போரில் பலி கொடுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
தியானத்தில் இருந்த சிவபெருமானின் தியானத்தினை பார்வதி களைத்தார். அதனால் நாக லோகத்தில் பார்வதி பிறந்து, சாபகாலம் முடிந்த பிறகு பூமியில் கோயில் கொள்ளுமாறு சிவபெருமான் சாபம் கொடுத்தார். பார்வதி நாகலோகத்தில் பிறந்து பிறகு பூமியில் குமிளங்காட்டில் கோயில் கொண்டாள் என குமிளங்காடு ஆதிநாகத்தம்மன் கோயில் தலவரலாறு கூறுகிறது. [1]