நாக்குரு லாகுனா

நாக்குரு லாகுனா (Nakuru Lacuna ) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் இடைவிட்டுத் தோன்றுகின்ற பெரிய ஏரியாகும் [1]. 65.81° மற்றும் 94° மே [2] என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 175 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இந்த ஏரி காணப்படுகிறது. நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள கென்யாவின் [4] நாக்குரு ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு நாக்குரு லாகுனா என்று 2013 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது [5]. டைட்டனில் உள்ள ஆறாவது மிகப்பெரிய ஐதரோகார்பன் ஏரி இதுவாகும்.

அகச்சிவப்புக்கு அருகில் டைட்டனின் துருவக் கடல் மற்றும் ஏரிகளின் தோற்றம்-கேசினி விண்வெளி ஆய்வகப் படம்

மேற்கோள்கள் தொகு

  1. Map of the liquid bodies in the north polar region of Titan.
  2. Planetary names
  3. Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.
  4. Nakuru Lacuna at Planetary names.usgs.gov.
  5. "Five New Names Approved for Use on Titan". Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்குரு_லாகுனா&oldid=3560300" இலிருந்து மீள்விக்கப்பட்டது