நாசோ டோக்கி
நாசோ டோக்கி (نازو توخۍ, Nāzo Tokhī), பரவலாக நாசோ ஆனா (பஷ்தூ: نازو انا, "நாசோ ஆச்சி"), பஷ்தூ மொழியில் புலமை பெற்ற ஆப்கானித்தான் கவிதாயினி, எழுத்தாளர்.[1] 18-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற ஆப்கன் அரசர் மீர்வாய்சு ஓடக்கின் அன்னையுமாவார். காந்தார வட்டாரத்தின் செல்வாக்குமிக்க குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர்.[2] ஆப்கானித்தானிய வரலாற்றில் வீரமிக்க பெண் போர் வீராங்கனையாக அறியப்படுகிறார். இதனால் இவர் "ஆப்கன் நாட்டு அன்னை" எனவும் அழைக்கப்படுகின்றார்.[3][4]
நாசோ டோக்கி | |
---|---|
பிறப்பு | 1651 கந்தகார், ஆப்கானித்தான் |
இறப்பு | 1717 (அகவை 65–66) காந்தாரம் |
மற்ற பெயர்கள் | நாசோ அனா, நாசோ நியா |
அறியப்படுவது | கவிதை, ஆப்கன் ஒற்றுமை, வீரம்,மீர்வாய்சு ஓடக்கின் அன்னை |
வாழ்க்கைத் துணை | சலிம் கான் ஓடக் |
இளமையும் குடும்பப் பின்னணியும்
தொகுநாசோ டோக்கி ஏறத்தாழ 1651ஆம் ஆண்டில் ஆப்கானித்தானின் கந்தகார் மாகாணத்தில் தாசி அருகே இசுபோசுமயீசு குல் என்ற சிற்றூரில் செல்வாக்கும் செல்வமும் மிகுந்த பஸ்தூன் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, சுல்தான் மலகாய் டோக்கி, பஷ்தூன் பழங்குடியினரின் குறிப்பிடத்தக்கத் தலைவராகவும் காசுனி வட்டார ஆளுநராகவும் இருந்தார்.[5] நாசோ டோக்கி, கரம் கான் என்பவரின் மகனான சலிம் கான் ஓடக்கை திருமணம் செய்து கொண்டார்.[4] ஓடக் கோமரபு என அறியப்பட்ட மரபின் புகழ்பெற்ற ஆப்கன் அரசர் மீர்வாயிசு ஓடக் இவரது மகனாவார். இவரது பேரப்பிள்ளைகளான மகமூது ஓடக், உசைன் ஓடக்கும் புகழ்பெற்று இருந்தனர்.[6]
நாசோ அனா கற்றுணர்ந்த கவிதாயினியாகவும் கண்ணியம் மிக்கவராகவும் விளங்கினார். அவரது அன்பாலும் அக்கறையாலும் மக்களைக் கவர்ந்தார். நாசோவின் தந்தையார் தமது மகளின் கல்வியிலும் வளர்ப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். கந்தகாரின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் அவருக்கு கற்பித்தனர். அவரது கவிதைகளாலும் பஷ்தூன் சட்டங்களுக்கு அளித்த ஆதரவாலும் "ஆப்கன் நாட்டு அன்னை" என அறியப்பட்டார்.[3] பஷ்தூன்வாலியை பஷ்தூன் இனக்குழுக்களின் கூட்டமைப்பிற்கான பொதுச் சட்டமாக்க நாசோ முயன்றார்; கில்ஜி மற்றும் சடோசய் இனங்களிடையே இருந்து வந்த சண்டைகளுக்கு தீர்வு கண்டதுடன் அவர்களை இணைந்து வெளிநாட்டு பெர்சிய சபாவித்து அரசர்களை எதிர்கொள்ளத் தூண்டினார். ஆப்கன் பண்பாட்டிற்கு நாசோவின் கவிதைகள் ஆற்றிய பங்கு இன்றும் மதிக்கப்படுகின்றது.
சூர் மலைகள் அருகே அவரது தந்தை போர்க்களத்தில் கொல்லப்பட்ட போது நாசோவின் தமையன் போருக்குச் சென்றான்; அந்த நேரத்தில் வீட்டையும் கோட்டையையும் பாதுகாக்கும் பொறுப்பை நாசோ ஏற்றார். அவர் வாளேந்தி தமது போர்வீரர்களுக்குத் தலைமை தாங்கி எதிரிகளுடன் போரிட்டு கோட்டையைப் பாதுகாத்தார்.[7]
கவிதை
தொகுகீழே நாசோ டோக்கியின் கவிதை ஒன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது (நாசோ பஷ்தோ மொழியில் எழுதிய இரண்டாயிரம் சொச்சம் கவிதைகளிலிருந்து):
வைகறைப் பூக்களில் பனித்துளிகள்
சோர்வான கண்களிலிருந்து விழும் கண்ணீர்த் துளிகள்;
ஓ அழகே, கேட்கிறேன், ஏன் அழுகிறாய் ?
எனக்கு வாழ்க்கையே மிகச்சிறியது, பகர்ந்தது பூவும் தான்,
எனது அழகு மலர்ந்தது, உடன்தான் வாடிடுமே,
புன்னகை வந்து உடன் எப்போதைக்கும் மறைவது போலே.[8]— நாசோ டோக்கி
பழம்பெரும் கனவு
தொகுநாசோ அனாவிற்கு மீர்வாய்சு ஓடக் மகனாகப் பிறந்த வேளையில் அவர் வியத்தகு கனவு ஒன்று கண்டதாக நாட்டுப்புறக் கதைகள் குறிப்பிடுகின்றன.
மீர்வாய்சு பிறந்த இரவன்று (1673), அவரது அன்னை, நாசோ அனாவின் கனவில் சேய்க் பெட் நிகா தோன்றினார். இவர் பஷ்தூன்களின் பெத்தனி கூட்டமைப்பிற்கு முன்னோடி அல்லது நாட்டாரியல் தலைவராக கருதப்பட்டார். அவர் நாசோவிடம் பிறக்கும் குழந்தையை நன்றாக வளர்க்குமாறு கூறினார். இந்தக் குழந்தை வளர்ந்து நாட்டிற்கு சிறந்த சேவைகளை வழங்குவார் எனக் கூறினார். இதனை நாசோ அவ்வப்போது மகனிடம் நினைவு கூர்ந்து நாட்டிற்காக நம்பிக்கையுடன் சேவையாற்றுமாறு வலியுறுத்துவார். இளம் மீர்வாய்சு அன்னையின் இந்த அறிவுரையை கடைசி வரைப் பின்பற்றினார்.[2]
இறப்பு
தொகுநாசோ அனா தமது மகன் மீர்வாய்சு இறந்து இரண்டாண்டுகளில் 66ஆம் அகவையில், ஏறத்தாழ 1717இல், மரணித்தார். அவரது மறைவிற்குப் பிறகு ஆப்கன் எமிர் அகமது ஷா துர்ரானியின் அன்னை சர்குனா அனா அவரது இடத்தை ஏற்றார்.
மரபு
தொகுநாசோ அனா ஆப்கானியர்களால் ஓர் வீராங்கனையாக மதிக்கப்படுகிறார். பல்வேறு ஆப்கானிய பள்ளிகளும் பிற நிறுவனங்களும் அவரது பெயரைத் தாங்கி விளங்குகின்றன.[9][10][11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Anjuman-i Tārīkh-i Afghānistān (1967). Afghanistan, Volumes 20-22. Historical Society of Afghanistan. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7787-9335-4. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
- ↑ 2.0 2.1 "Mirwais Neeka". www.beepworld.de. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
- ↑ 3.0 3.1 "Tribal Law of Pashtunwali and Women's Legislative Authority" (PDF). ஆர்வர்டு பல்கலைக்கழகம். 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
- ↑ 4.0 4.1 Hōtak, Muḥammad; ʻAbd al-Ḥayy Ḥabībī; Khushal Habibi (1997). Pat̲a k̲h̲azana. United States: University Press of America. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761802655. பார்க்கப்பட்ட நாள் 2010-09-27.
- ↑ Anjuman-i Tārīkh-i Afghānistān (2009). The Kingdom of Afghanistan: A Historical Sketch. BiblioBazaar, LLC. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781115584029. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
- ↑ "Nazo Anaa". Afghanan Dot Net. Archived from the original on 2010-11-09. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
- ↑ The Hidden Treasure: A Biography of Pas̲htoon Poets By Muḥammad Hotak, ʻAbd al-Ḥayy Ḥabībī, p.135
- ↑ "Naz o Ana by Mohammad Osman Mohmand". Khyber.org. 2003. Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2011-08-20.
- ↑ "Nazo Ana Primary School in Afghanistan". Archived from the original on 2012-03-08. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
- ↑ "Nazo Ana High School for girls in Kandahar, Afghanistan". Archived from the original on 13 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
- ↑ "Blog – afghanistanwomencouncil.org". www.afghanistanwomencouncil.org. Archived from the original on 23 February 2010. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
- ↑ http://www.pajhwok.com/viewstory.asp?lng=eng&id=72917[தொடர்பிழந்த இணைப்பு]