நாஞ்சில் ஏடு

நாஞ்சில் ஏடு நூல் 1961 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று குமரி மாவட்டத்திலுள்ள வீராணமங்கலத்தில் அமைந்திருந்த மனோரமா பப்ளிஸிட்டியால் வெளியிடப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் இறச்சக்குளத்தைச் சார்ந்த பி.ஜெ. பொன்னையா, இதன் உரிமை ஆசிரியர் வீராணமங்கலத்தைச் சார்ந்த வி.எஸ். ஆபிரகம்.

ஆசிரியர் குறிப்பு தொகு

குமரி மாவட்டத்திலுள்ள அறிவும், ஆற்றலும், சீரும், சிறப்பும், அன்பும், நற்பண்பும் மற்றும் அறவாழ்வும் கொண்ட பல நல்லோர்களின் குறிப்பை குமரி ஏடு என வெளியிட முயற்சி செய்து நிதிப்பற்றாக்குறையினால் குமரி மாவட்டத்தின் நாஞ்சில் பகுதியைச் சார்ந்தவர்களை மட்டும் கொண்டு நாஞ்சில் ஏடு வெளியிடப்படுகிறது.

காணிக்கை தொகு

இந்நூலை நாஞ்சில் நாட்டின் தேரூரைச் சார்ந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். அக்குறிப்பில்,

நாஞ்சில் தமிழை நாவாலும் பாவாலும் நயம்பட எடுத்தியம்பி நாவலரும் பாவலரும் நாடிவந்து போற்றும் வண்ணம் நாஞ்சில் நாட்டினுக்கு நற்பெயரீட்டி வைத்து, நற்பதமெய்திய கவிமணியாம் கவிமணி.சி. தேசிய வினயகனுக்கு இந்த நாஞ்சில் ஏடு எம் காணிக்கையாய் அமைவதாக.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்_ஏடு&oldid=1791956" இலிருந்து மீள்விக்கப்பட்டது