நாடாளுமன்ற நிதிக் குழு (இந்தியா)
நிதித்தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு (Standing Committee on Finance (SCOF), இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் 31 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இக்குழுவில் மக்களவையின் 21 உறுப்பினர்களும், மாநிலங்களவியின் 10 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். [1]இக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். இக்குழுவின் தலைவரை இந்திய மக்களவைத் தலைவர் நியமிப்பர்.
பதினேழாவது மக்களவை | |
துவக்கிய ஆண்டு | ஏப்ரல் 1993 |
---|---|
நாடு | இந்தியா |
தலைமை | |
தலைவர் சார்ந்த கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
குழுவை நியமிப்பவர் | இந்திய மக்களவைத் தலைவர் |
அமைப்பு | |
உறுப்பினர்கள் | 31 (மக்களவை: 21) (மாநிலங்களவை: 10) |
தேர்வு முறை | மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அரசியல் கட்சிகளின் உறுப்ப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப குழுவின் 31 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். |
பதவிக் காலம் | ஓராண்டு |
அதிகார வரம்பு | |
பணி | கீழ்கண்ட அமைச்சகங்களின் கொள்கைகள் மற்றும் மற்றும் எடுத்த முடிவுகளையும் மேற்பார்வையிடுவது. |
Rules and procedure | |
Applicable rules | Rule 331 C through N (page 122 - 125) Fifth Schedule (page 158) |
குழுவின் பணிகள்
தொகுகீழ்கண்ட அமைச்சகங்களின் கொள்கைகள் மற்றும் எடுத்த கொள்கை முடிவுகளையும், ஆண்டறிக்கைகளையும் ஆய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தலே இக்குழுவின் பணியாகும்.
இக்குழுவின் அண்மைய ஆண்டுகளின் பணிகள்
தொகுஇக்குழுவின் அண்மைய ஆண்டின் குறிப்பிடத்தக்க பணிகள்
- 2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் விளக்கம் கோரியது.
- 2016-இல் இந்திய இருப்புப்பாதை நிதியறிக்கையை தனியாக வெளியிடாது, பொது நிதிநிலை அறிக்கையுடன் இணைத்து வெளியிடப்பட்டது. [5]
- பஞ்சாப் நேசனல் வங்கியில் 1,400 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக இக்குழு 2018-இல் நிதி அமைச்சகத் தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகளை விசாரித்தது. [6]
- இக்குழு 2018-இல் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதிச் சேவை நிறுவனத்தின் (Infrastructure Leasing & Financial Services) நிதி மோசடிகளை ஆய்வு செய்து, அந்நிறுவனத்தின் 15 இயக்குநர்களை நீக்கியது. [7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ நிதிக் குழு உறுப்பின்ர்கள், 2019-2020
- ↑ "Planning Commission to NITI Aayog". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-16.
- ↑ Sharma, Yogima Seth (2016-12-07). "NITI Aayog needs greater clarity on departmental coordination: Standing committee". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/economy/policy/niti-aayog-needs-greater-clarity-on-departmental-coordination-standing-committee/articleshow/55855358.cms.
- ↑ "Lost in translation: Is NITI Aayog a commission or an institution?" (in en-US). The Indian Express. 2015-02-18. https://indianexpress.com/article/india/india-others/lost-in-translation-is-niti-aayog-a-commission-or-an-institution/.
- ↑ "Budget merger report will be submitted by November: Veerappa Moily - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/Budget-merger-report-will-be-submitted-by-November-Veerappa-Moily/articleshow/54559308.cms.
- ↑ PTI (2018-02-15). "PNB fraud: Parliamentary panel seeks report from finance ministry". https://www.livemint.com/Politics/Q3BCDaLvgaVu47noSDZUNK/PNB-fraud-Parliamentary-panel-seeks-report-from-finance-min.html.
- ↑ Manoj, C. L. (2018-10-04). "House panel to summon IL&FS board, LIC & SBI representatives, RBI officials". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/house-panel-to-summon-ilfs-board-lic-sbi-representatives-rbi-officials/articleshow/66062099.cms.